ஜனநாயகன் படம் கசிய காரணமே இவங்கதான்…. படக்குழு அதிரடி!

ஜனநாயகன் படம் முழுவதும் இணையத்தில் கசிந்துள்ள நிலையில், யார் காரணம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து, முழு நேர அரசியலில் குதித்துள்ளார். 2026 தேர்தலை மையப்படுத்தி களமிறங்கியுள்ள தவெக, புதுச்சேரியில் போட்டியிட்டது. நேற்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது

இதையடுத்து வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் நடக்கும் தேர்தலுக்காக தவெக தலைவர் விஜய், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே தனது கடைசி படம் ஜனநாயகன் என விஜய் அறிவித்துள்ள நிலையில், படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் அளிக்காததால், படம் தள்ளிப்போனது.

Advertisement

நீதிமன்றம் வரை சென்று, தற்போது மீண்டும் தணிக்கை வாரியத்திடமே படம் வந்துள்ளது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கவில்லை. இதனால் படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக நேற்று ஜனநாயகன் படத்தின் முதல் 5 நிமிட காட்சி இணையத்தில் கசிந்தது. இது சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாமல் அரசியலிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

விஜய்யின் வளர்ச்சியை தடுக்க இவ்வாறு செய்யப்படுகிறதா என்ற கேள்வியையும் ரசிகர்கள், தொண்டர்கள் முன் வைத்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் திசை திருப்ப இப்படி நடப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

இந்த நிலையில் ஜனநாயகன் படத்தை வெளியிட விடாமல் முடக்கியது மத்திய இணையமைச்சர் எல்.முருகன் என தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் பாஜகவும், திமுகவும் சேர்ந்து கூட்டு சதி செய்து படத்தை இணையத்தில் கசியவிட்டுள்ளனர், திமுகவின் உதயநிதியுடன் சேர்ந்து எல். முருகன் முடக்கியுள்ளதாக ஆதவ் கூறியுள்ளார்.

Jana Nayagan Producers WArning

இந்த நிலையில் படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகன் படக் காட்சிகளை லீக் செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பபடும் என தயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது.

Flipkart Link 2
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...