எஸ்.கே.வை பின்னுக்கு தள்ளிய பிரதீப்… சம்பளம் மட்டும் பல கோடி!

இயக்குநரான பிரதீப் ரங்கநாதன், ஹீரோவாக நடித்து வரும் நிலையில், பல கோடிகளாக சம்பளத்தை உயர்த்தி சிவகார்த்திகேயனை ஓரம்கட்டியுள்ளார்.

Advertisement

இயக்குநராக பிரதீப் ரங்கநாதன் கோமாளி படம் மூலம் அறிமுகமானார். முதல் படமே நல்ல மெசேஜாக அமைந்தது. படத்தில் ரவி மோகன், யோகி பாபு நடிப்பு பாராட்டுகளை பெற்றது.

‘கயல்’ சீரியல் நடிகை விபரீத முடிவு.. வீடியோ காலில் உயிரை மாய்த்த சோகம்!

Comalai Pradeep

அந்த படத்தில் ஆட்டோ ஓட்டுநராக சில நிமிடங்கள் மட்டும் பிரதீப் வந்தாலும், ரசிகர்கள் மனதை கவர்ந்தார். க்ளைமாக்சில் படம் நல்ல கருத்தை பதிவு செய்ததால் பிரதீப் ரங்கநாதனுக்கு பாராட்டுகள் குவிந்தது.

Advertisement

இதையடுத்து லவ் டுடே என இளைஞர்களுக்காக உருவாக்கிய பிரதீப், அவரே ஹீரோவாக நடித்தார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, மிகப்பெரிய வசூலை குவித்தது.

Read news:சிங்கப்பெண்ணே சீரியல் நடிகைக்கு ஒரு நாள் சம்பளம் எத்தனை தெரியுமா? தலையே சுத்துதே!

Advertisement

இதனால் ஹாட் ஸ்டாராக பேசப்பட்ட பிரதீப் ரங்கநாதனின் அடுத்தடுத்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்தது. தொடர்ந்து ஏஜிஎஸ் கூட்டணியில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்து வெளியான டிராகன் படம் அதிரிபுதிரி ஹிட் படமாக அமைந்தது.

Love Today

பாடல்கள், நடிப்பு, கதை என அத்தனையிலும் கமர்ஷியல் ஹிட் கொடுத்து, ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்ததால், பிரதீப் ரங்கநாதன் மார்க்கெட் உயர்ந்தது. இதனிடையே விக்னேஷ் சிவன் இயக்கத்தில LIK படத்தில் நடித்து வந்தார் பிரதீப். ஆனால் பல கட்டங்களாக அந்த படத்தின் வெளியீடு தேதி தள்ளிப்போனது.

இதற்கிடையில் பிரதீப் நடித்த DUDE படம் வெளியானது. சாய் அபயங்கர் இசையில் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் வைரலாக, படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியது. மமிதா பைஜூ நாயகியாக நடித்திருந்தார்.

Dude

ஆனால் படத்தின் கதை புதியதாக இருந்தாலும், சிலர் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என மறுத்தனர். ஆனால் GENZ தலைமுறையினரோ படத்தை கொண்டாடியது மட்டுமல்லாமல், ரூ.100 கோடி வசூலை தாண்ட காரணமாகியிருந்தனர்.

இப்படி ஹாட் ட்ரிக் வெற்றியை பதிவு செய்த பிரதீப் காட்டில் நல்ல மழை என்றே சொல்லலாம். படத்திற்கு படம் வித்தியாசம், ரூ.100 கோடி வசூல் என தயாரிப்பாளர்கள் கொண்டாடும் நாயகனாக உள்ள பிரதீப் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளார்.

LIK

வரும் ஏப்ரல் 10ஆம் தேதி LIK படம் வெளியாகிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்க, பாடல் முன்னரே வெளியாகி வரவேற்றை பெற்றிருந்தது.
அண்மையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் தனது சம்பளம் ரூ.50 கோடி என கறாராக கூறியுள்ளாராம். அடுத்த படதாக தெலுங்கு இயக்குநர் சந்திரசேகர் இயக்கும் படத்தில் நடிக்கும் அவர் இந்த சம்பளத்தை வாங்க உள்ளார்.
வசூல் அதிகமாக வருவதால் சம்பளம் பற்றி தயாரிப்பாளர்கள் கவலைப்படுவதில்லை என கூறப்படுகிறது.

Telugu

சிவகார்த்திகேயனே தனது சம்பளத்தை ரூ.30 கோடி முதல் ரூ.50 கோடி வரை வாங்கி வரும் நிலையில், உச்ச நட்சத்திரங்களுக்கு இணையாக பிரதீப் சம்பளம் வாங்குவது கோலிவுட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Flipkart Link 1
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...