Header Top Ad
Header Top Ad

கோவையில் பிரதமர் மோடியின் ஓவிய கண்காட்சி துவங்கியது

கோவை: பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் ஓவிய கண்காட்சி துவங்கியது.

கோவையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ‘மோடியின் தொழில் மகள்’ எனும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, நிகழ்ச்சி நடைபெற உள்ள கோவை கணபதி வாஜ்பாய் திடலில் பிரதமர் நரேந்திர மோதியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, 75 ஓவியங்கள் இடம் பெற்றுள்ள கண்காட்சி இன்று துவங்கப்பட்டது.

கண்காட்சியை மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர், கோவை மாநகர மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சேலஞ்சர் துறை ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

Advertisement

கண்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சிறு வயது முதல் பிரதமர் பொறுப்பு ஏற்றது வரையிலான பல்வேறு ஓவியங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, மோடியின் ஆட்சி காலத்தில் ஏழை எளிய மக்களுக்கான ஆதரவு, சூரிய மின் உற்பத்தி திட்டங்கள், வேளாண்மை மேம்படுத்துவதற்கான திட்டம், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் சர்வதேச நாடுகள் உடனான நட்புறவு ஆகியவற்றை குறிக்கும் வகையில் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இக்கண்காட்சியினை பொதுமக்கள் பலர் பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும், மோடியின் தொழில் மகள் பயிற்சி மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், பாரதப் பிரதமரின் ஆத்ம நிர்பர் – சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்ளூரைச் சேர்ந்த ஓவியக் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த புகைப்பட கண்காட்சியில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் தயாரிப்புகள், வேளாண்மை மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்கு பாரத பிரதமர் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், குறிப்பாக தமிழர்களுக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் பிரதமர் சிறந்த அங்கீகாரங்களை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்ற ஓவியங்களை வரைந்த கோவையைச் சேர்ந்த ஓவியர் பரிதி ஞானம் கூறுகையில், அழிந்து வரும் ஓவிய முறையான அக்ரலிக் பெயிண்டிங் முறையில் இந்த ஓவியங்களை வரைந்துள்ளதாகவும், குறிப்பாக பிரதமர் மோடியின் திட்டங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றை விளக்கும் வகையில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பாஜக கோவை மாநகர மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ள மோடி தொழில் மகள் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோசி, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

Recent News