Production Linked Incentive சிஸ்டம் கோவை போட்டியிட உதவும்; மத்திய அமைச்சர் பேச்சு!

கோவை: Production Linked Incentive சிஸ்டம் கோவை போட்டியிட உதவும் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் கூறியுள்ளார்.

கோவை அண்ணா சிலை அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில்
Confideration Indian Textile Industry – இந்திய ஜவுளித்துறை கூட்டமைப்பு சார்பில் “3rd man made fibre conclave – மூன்றாவது செயற்கை இழை கருத்தரங்கு” துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் மத்திய ஜவுளி தொழில் துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கரிட்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்தார்.

இதில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஜவுளி தொழில் துறையினர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சிறப்புரையாற்றிய அமைச்சர், ஜவுளி தொழில்துறையில் கோவை மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகள் தேசிய அளவில் சிறப்பாக இயங்கி வருவதாகவும், ஜவுளித்துறை மேம்பாட்டிற்காக மத்திய அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், குறிப்பாக production linked incentive திட்டம் சர்வதேச அளவில் நாம் போட்டியிடுவதற்கு உறுதுணையாக இருந்து வருவதாகவும், இத்திட்டத்திற்காக ஜவுளி துறையின் பட்ஜெட்டில் 22 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், ஜவுளி துறையின் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் விதமாக பி எம் மித்ரா பார்க் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், சர்வதேச அளவில் செயற்கை இழை சந்தையில் இந்தியாவின் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து செயற்கை இழை தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், கடந்த நிதியாண்டில் இந்தியாவின் செயற்கை இழை தயாரிப்புகளின் ஏற்றுமதி 6 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளதாகவும், சர்வதேச சந்தைக்கு உகந்த சூழல் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வினை அடுத்து, தேசிய பஞ்சாலை கழக தொழிற்சாலைகளை திறக்க வலியுறுத்தி சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் அமைச்சரிடம் மனுக்களை அளித்தனர்.

இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய இணை அமைச்சர், NTC தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து விரைவில் தீர்வு காணப்படும் எனவும்,
தொழிலாளர்களுக்கு சம்பளம் மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர், இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதற்கான தீர்வு காண்பதற்கான வழிவகைகளை செய்வோம் எனவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஜவுளித்துறை மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது என தெரிவித்த அவர்,
திருப்பூர் மாவட்டம் ஜவுளித்துறைக்கான ஒளிமயமான எதிர்காலத்தை கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp