Red Alert Coimbatore: கோவை மாவட்டத்தில் இந்த வாரம் ஒரு நாள் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், நாளை மற்றும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 3,4) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்படுகிறது. கோவை, நீலகிரி மட்டுமல்லாது கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறையிலும் இந்த இரண்டு நாட்கள் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
ஆகஸ்ட் 5ம் தேதி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்படுகிறது. அதாவது இந்த நாளில் 204 மி.மீட்டர் வரை மழை பதிவாகலாம்.
இதே நாளில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்படுகிறது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பொதுமக்கள் இந்த வானிலை முன்னறிவிப்பிற்கு ஏற்ப தங்கள் பயணத் திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம்.
கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
வானிலை மையம் கொடுக்கும் அடுத்தடுத்த அப்டேட்டுகளை நமது தளத்தில் வெளியிடுகிறோம்.




