பாரிஸில் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானுடன் சத்குரு சந்திப்பு

கோவை: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அந்நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரானை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு சந்தித்தார். சந்திப்பின்போது எடுத்த புகைப்படத்தை நவம்பர் 10-ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டார்.

மேக்ரானை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்ததாக சத்குரு தனது பதிவில் தெரிவித்தார். மேலும், தம்மை அன்புடன் வரவேற்று உபசரித்ததற்காக மேக்ரானுக்கு நன்றி தெரிவித்தார்.

Advertisement

இருவரும் என்ன பேசினர் என்பது குறித்த விவரங்கள் அந்தப் பதிவில் இடம்பெறவில்லை.

முன்னதாக, இந்தியா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு மேக்ரான் இன்ஸ்டாகிராம் மூலம் தீபாவளி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

Advertisement

ஒற்றுமை, அமைதி, நம்பிக்கை ஆகியவற்றைப் பேண தீபாவளி ஊக்கமளிக்கட்டும் என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

Isha Foundation founder Sadhguru with French President Emmanuel Macron in Paris.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் தவெக பெண் நிர்வாகி பாலியல் புகார்… சொந்தக் கட்சி நிர்வாகிகள் மீதே பரபரப்பு குற்றச்சாட்டு!

கோவை அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளர் மீது, அதே கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி பாலியல் சீண்டல் மற்றும் சாதிய வன்கொடுமைப் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...