விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பள்ளி குழந்தைகள்

கோவை: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பள்ளி குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.

அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியின் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. ஏர் இந்தியா போயிங் 787-8 விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேரில் 241 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என கோவை மணியக்காரன் பாளையம் பகுதியில் உள்ள கேம்போர்ட் பள்ளி குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இதில் பள்ளி குழந்தைகள் ஆசிரியர்கள் என திரளானோர் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செய்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Recent News

சூலூரில் தீ விபத்து- கரும்புகை அதிகளவு வெளியேறியதால் மக்கள் அச்சம்..

கோவை: சூலூரில் எலக்ட்ரானிகல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

Video

Join WhatsApp