கோவை: தன்னை ஆபாசமாக சித்தரிப்பதாக, விஜய் மீதும், த.வெ.க தொண்டர்கள் மீதும் கோவை தி.மு.க-வைச் சேர்ந்த இளம்பெண் வைஷ்ணவி புகார் அளித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து, கட்சிப்பணியாற்றி வந்த கோவையைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற இளம் பெண், தனக்கு கட்சியில் முன்னுரிமை கொடுக்கவில்லை என்று கூறி கட்சியில் இருந்து விலகினார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார். அதற்கு முன்பு வரை விஜய் புகழ் பாடிக்கொண்டிருந்த வைஷ்ணவி, பின்னர் விஜய் குறித்தும், அவரது கட்சி குறித்தும் விமர்சிக்கத் தொடங்கினார்.
வைஷ்ணவியின் விமர்சனத்திற்கு சிலர் ஆதரவுக் கருத்துக்களை வெளியிட்டனர். பலர் வைஷ்ணவியை விமர்சிக்கத் தொடங்கினர். வைஷ்ணவியின் புகைப்படத்தை AI மூலம் மாற்றி, அவர் 200 ரூபாயை கையில் வைத்துக் கொண்டு சிரிப்பது போன்றும், அரசியல் ரீதியாக விமர்சித்தும் சிலர் பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.
பொதுமக்கள் பலரும் இந்த போஸ்டுகளில் தாறுமாறாக கமென்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே அவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வைஷ்ணவி கூறுகையில், “த.வெ.க-வில் இருந்து வெளியேறியது முதல் என்னை பற்றி அக்கட்சியினர் சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
இது சம்பந்தமாக த.வெ.க தலைவர் விஜய் கண்டன, அறிக்கை எதுவுமே வெளியிடவில்லை. எனவே, விஜய் மீதும் த.வெ.க தொண்டர்கள் மீதும் புகார் அளித்துள்ளேன். நாங்கள் கருத்தியல் ரீதியான கேள்விகளை த.வெ.க-வினரிடம் முன்வைத்தாலும் கூட அவதூறான கருத்துக்கள் தான் கூறுகின்றனர்.” என்றார்
வைஷ்ணவி பேட்டி வீடியோ காட்சிகள்
வைஷ்ணவி புகார் குறித்த தங்கள் கருத்துகளை, கீழே கமென்ட் செய்யலாம் 👇
Comments are closed.