Header Top Ad
Header Top Ad

சிறுவாணி அணை நீர்மட்டம்

கோவை: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

கோவை மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது சிறுவாணி அணை. இந்த அணையிலிருந்து கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 22 வார்டுகளுக்கும், 28 கிராமங்களுக்கும், 7 டவுன் பஞ்சாயத்துகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதனிடைய கோவை மாவட்டத்தில் தற்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சிறுவாணி அணைப்பகுதியில் தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

மொத்தம் 49.53 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையில், 44.61 அடிக்கு நீரைத் தேக்க கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் தற்போது 39.43 அடிக்கு நீர் உள்ளது. 95.56/101.40 எம்.எல்.டி. அளவுக்கு தற்போது குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

Recent News