என்ன தைரியம்? கோவையில் கூட்டத்திற்குள் புகுந்து சிறுவனைக் கடித்த தெருநாய்!

கோவை: கோவையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்த சிறுவனை கடித்த தெரு நாயின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன

கோவை, மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பரவலாக தெரு நாய் தொல்லை அதிகரித்து உள்ள நிலையில் கரும்புகடை பகுதியில் நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டு இருந்த சிறுவன் ஒருவனை தெரு நாய் ஒன்று கடிக்கும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய் தொல்லை அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில் அது குறித்து மாமன்ற கூட்டங்களிலும் கவுன்சிலர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். இருப்பினும் மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரு நாய்களை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கததால் ஆங்காங்கே பொதுமக்கள் தெரு நாய் கடிக்கு ஆளாகும் சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலையில் கோவை உக்கடம் அடுத்த கரும்புக்கடை பகுதியில் தனது நண்பர்களுடன் வீட்டின் முன்பாக நின்று பேசிக் கொண்டு இருந்தார்.

அப்போது தெரு நாய் ஒன்று திடீரென கடித்து விட்டு ஓடும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாய் கடித்ததால் காலில் காயம் ஏற்பட்டு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில் அதிகரித்து வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தெருநாய் பெருக்கத்தை கட்டுப்படுத்த நாய் கருத்தடை மையத்தை கால்நடை மருத்துவமனைக்கு இடம் மாற்ற வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சிசிடிவி காட்சிகள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp