கோவை: கோவை கிழக்கு புறவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வலியுறுத்தி கோவையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டமானது பல்லடம் அருகே செம்மிபாளையத்தில் துவங்கி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மத்தம்பாளையம் பகுதியில் முடிவடைகிறது. இதனிடையே 1200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் இருப்பதால் அந்த நிலங்கள் பாதிக்கப்படும் விவசாய குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அன்னூர் கிட்டாம்பாளையம் பகுதியில் இந்த திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு திட்டத்தை கைவிட வலியுறுத்தி மாநில அரசுக்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், சுமார் 1200 ஏக்கர் மேல் உள்ள விளைநிலங்கள் மட்டுமின்றி, ஏரிகள் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால்களும் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தை கிராமசாலைகள் வழியாகவோ அல்லது வேறு வழியாகவோ செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு கோவை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கந்தசாமி மற்றும் பி ஆர் ஜி அருண்குமார் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர் அதுமட்டுமின்றி பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜிகே நாகராஜ் அவரும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார்.