கோவையில் பதவி உயர்வு பெற்ற எஸ்ஐ.,க்கள் இன்ஸ்பெக்டர்களாக நியமனம்!

கோவை: பதவி உயர்வு பெற்ற எஸ்ஐ.,க்கள் இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டனர்.

கோவை மாநகரில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து ஐஜி செந்தில்குமார் உத்தரவிட்டு இருந்தார்.

அதேபோல எஸ்ஐ., யாக பணிபுரிந்து இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற போலீசாரையும் கோவை சரகத்தில் இன்ஸ்பெக்டர்களாக நியமிக்க உத்தரவிட்டு இருந்தார்.

இதையடுத்து கோவை மாநகர கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வந்த பதவி உயர்வு பெற்ற போலீசாரையும், கோவை சரகத்திற்கு மாற்றப்பட்ட போலீசாருக்கும் போலீஸ் நிலையங்கள் ஒதுக்கி டிஐஜி சசி மோகன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி எஸ்ஐ., யாக பணிபுரிந்து இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற விவேக் திருப்பூர் குண்டாடம் போலீஸ் நிலையத்திற்கும், செல்லமணி நீலகிரி அருவங்காடு போலீஸ் நிலையத்திற்கும், ஜெகதீசன் கோட்டூர் போலீஸ் நிலையத்திற்கும், நந்தகுமார் நெகமம் போலீஸ் நிலையத்திற்கும், சக்திவேல் நீலகிரி மாவட்டம் குன்னூர் போலீஸ் நிலையத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், திருவாரூர், ஆகிய இடங்களில் இருந்து கோவை சரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட 22 இன்ஸ்பெக்டர்களுக்கும் போலீஸ் நிலையங்களை ஒதுக்கி டிஐஜி உத்தரவிட்டுள்ளார். அதன்படி 27 இன்ஸ்பெக்டர்கள் கோவை சரகத்தில் மாற்றப்பட்டுள்ளனர்.

Recent News

Video

Join WhatsApp