குடும்பம் எடுத்த விபரீத முடிவு; ராமகிருஷ்ணா மருத்துவர் குகன் கொடுத்த அட்வைஸ்!

கோவை: புற்றுநோயால் குழந்தையினர் குடும்பத்தினர் தற்கொலை கொண்ட நிலையில் புற்றுநோய் வந்தால் பயப்பட வேண்டாம் என மருத்துவர் குகன் தெரிவித்துள்ளார்.

கோவையில் சமீபத்தில் இரத்த புற்றுநோயால் தம்பதியினர் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் புற்றுநோய் வந்தால் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் அதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் முழுமையாக சரி செய்து விடலாம் என புற்றுநோய் மருத்துவர் குகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் குகன் கூறியதாவது:-

கோவையில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். இதனால் அச்சபடத் தேவை இல்லை.

மார்பகப் புற்றுநோய் தொடர்பான ஆரம்ப அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

முதல் மற்றும் இரண்டாம் நிலை அறிகுறிகளின் போது மருத்துவரை அணுகினால் சுலபமாக மார்பகப் புற்றுநோயை சரி செய்ய முடியும்.

இப்போது அரசு காப்பீட்டு திட்டத்தின் மூலமாகவே இந்த நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும் என்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை.

கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுப்பதற்காக 9 முதல் 14 வயது வரை உள்ள மாணவிகள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு மருத்துவர் குகன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp