கோவையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட மேம்பாலம்- மக்கள் மகிழ்ச்சி…

கோவை: கோவையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட மேம்பாலத்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை சிங்காநல்லூர் அடுத்த SIHS காலனியில் ரயில்வே தண்டவாளம் செல்வதால் அதனை கடப்பதற்கு உயர்மட்ட மேம்பாலம் வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதனால் ரயில்வே தண்டவாளத்திற்கு கீழ் சுரங்க வழி அமைத்து தரப்பட்டது. ஆனால் மழை காலங்களில் மழை நீர் தேங்கி நின்று விடுவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். எனவே உயர்மட்ட மேம்பாலம் வேண்டுமென்ற கோரிக்கை மீண்டும் எழுந்தது.

அந்நிலையில் 2010ம் ஆண்டு நடைபெற்ற செம்மொழி மாநாட்டின் போது அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் குறிப்பிட்ட நிலங்கள் கையப்படுத்தப்பட்டு 2013ம் ஆண்டு மேம்பால வேலைகள் அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டது.

இருப்பினும் பல்வேறு காரணங்கள் காரணமாக பணிகள் மந்த நிலையில் நடைபெற்றன. அதனால் அந்த மேம்பால பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் என்று பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.

பின்னர் 2021ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சி அமைந் மீண்டும் மேம்பால பணிகள் விரைவு படுத்தப்பட்டு முடிவடைந்தது. சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு 55.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டு முடிக்கபட்ட இதனை இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மேம்பாலம் திறக்கப்பட்டது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp