மூன்றாவது நாளாக சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்…

கோவை: கோவையில் மூன்றாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 16,500 ரூபாய் அலுவலக உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் என்ற அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் அப்பொழுது பத்தாண்டு பணி முடிந்த தகுதியுள்ள பணியாளர்களை 50% சேர்க்க வேண்டும்

அங்கன்வாடிக்கு கோடை விடுமுறை தற்காலிக பணி நீக்க காலத்தில் பிழைப்பூதியம் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி தேசிய மருத்துவ காப்பீடு மகப்பேறு விடுப்பு 12 மாதம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் சுமார் 500 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீஸார் அங்கன்வாடி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் ஊழியர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை போலீஸார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்…

கோவை: தமிழ்நாடு முதலமைச்சரின் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாமினை கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன்நேரில் பார்வையிட்டார். கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் வார்டு எண்.95க்குட்பட்ட போத்தனூர் பகுதியில் அமைந்துள்ள...

Video

Join WhatsApp