மத்திய மாநில அரசுகளுக்கு இடையே இணக்கம் இருக்க வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன் கருத்து…

கோவை: மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நல்ல இணக்கம் இருக்க வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நேற்று இரவு செய்தியாளர்களை வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார். அப்போது பேசிய அவர் மத்திய அரசு என்றோ அல்லது ஒன்றிய அரசு என்றோ அழைப்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. வார்த்தைகளை வைத்துக்கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே தேவையின்றி முடிச்சுப் போடக் கூடாது என்றார்.

Advertisement

அரசு விழாக்களில் முதல்வர் உடை அணிவது குறித்து சிலர் சர்ச்சை கிளப்புகின்றனர். பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் அவர் பட்டு வேட்டி, சட்டை அணிவது வழக்கம்; அதை எதிர்ப்பின் அடையாளமாக நாமாகவே கற்பனை செய்துகொள்ளத் தேவையில்லை.

விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தில் நெசவாளர்களுக்கு கூலி உயர்வு வழங்குவது குறித்த கோரிக்கையை துறை அமைச்சரிடம் தான் கேட்க வேண்டும்; பெருந்துறையில் நடக்கும் நிகழ்ச்சியின்போது அதுபற்றி அவர் தெளிவான விளக்கம் அளிப்பார் என்று தெரிவித்தார்.

Advertisement

தமிழகத்தில் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் பணிச்சுமை காரணமாகவே ஆங்காங்கே தற்காலிக மின் தடை ஏற்படுகிறது. சுமார் 2 லட்சம் புதிய வீட்டு மின் இணைப்புகள் மற்றும் விவசாய இணைப்புகள் வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதேபோல் தொழிற்சாலைகளுக்கான மின் பங்கீடு மற்றும் நிலைக்கட்டணம் குறித்த விவகாரங்களில் முதல்வர் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றார்.

Advertisement

கூட்டணி விவகாரங்கள், தேர்தல் தொடர்பான அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் அனைத்தும் காலப்போக்கில் தான் தெரியவரும். மக்கள் விரும்பும் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் அறிவித்து, அவற்றை அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது என்று கூறினார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...