கோவை: 30 ஆண்டுகளாக ரசிகர் மன்றத்தில் இருக்கும் என்னையே ஓரங்கட்டுகிறார்கள் என முதல்வர் விஜய்யிடம் மூத்த ரசிகர் மன்ற நிர்வாகி புகார் தெரிவித்துள்ளார்.
கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைப்பதற்காக வந்த முதலமைச்சர் விஜய்யிடம், தற்போதைய கட்சி நிர்வாகிகள் தன்னைப் போன்ற மூத்த நிர்வாகிகளைப் புறக்கணிப்பதாக மேட்டுப்பாளையம் விஜய் ரசிகர் மன்ற நகரச் செயலாளர் ரங்கராஜன் நேரில் தெரிவித்த சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைப்பதற்காகத் தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த முதலமைச்சர் விஜய், விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாகக் காந்திபுரம் புறப்பட்டார்.
அப்போது, விமான நிலையத்தின் விஐபி நுழைவாயில் வழியாக அவர் வெளியே வந்தபோது, அங்கு காத்திருந்த மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரசிகர் மன்ற நகரச் செயலாளர் ரங்கராஜன், முதலமைச்சரைப் பார்த்துக் கையசைத்தார்.
அவரைக் கவனித்த முதலமைச்சர் விஜய், ரங்கராஜனை அழைத்துப் பேசினார். அப்போது, கட்சியில் தற்போது பொறுப்புகளில் இருப்பவர்கள் தன்னைப் போன்ற மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்டுவதாகத் தனது மனக்குமுறலை ரங்கராஜன் வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதைக் கேட்ட முதலமைச்சர் விஜய், “இதுகுறித்து விசாரிக்கிறேன்” எனத் தெரிவித்துவிட்டுச் சென்றதாக ரங்கராஜன் கூறினார்.
மேலும், கடந்த 30 ஆண்டுகளாக விஜய் ரசிகர் மன்றத்தில் செயல்பட்டு வருவதால், தன்னைப் பார்த்ததும் முதலமைச்சர் எளிதில் அடையாளம் கண்டுகொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் மத்தியில் ரசிகர்களைச் சந்திப்பது ஒருபுறம் இருக்க, கட்சியில் மூத்த நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுவதாக முதலமைச்சரிடமே நேரடியாகப் புகார் தெரிவித்த சம்பவம் கோவையில் பேசுபொருளாகியுள்ளது.






