கோவை: தீபாவளிக்கு திமுக அரசு செய்த சாதனை மது விற்பனையை அதிகமாக நடத்தியது தான் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள
பாஜக அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கோவைக்கு வருகிறார், அதற்கான ஏற்பாட்டை கோவை சிட்டிசன் ஃபோரம் என்ற அமைப்பினர் செய்திருக்கின்றனர் என்றார்.
அவர்களின் ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக வந்திருப்பதாக கூறினார்.
கொடிசியாவில் இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது, ஒரு
தமிழரை துணை ஜனாதிபதியாக்கிய பெருமை பாஜக விற்கும்,
பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும் உள்ளது என தெரிவித்தார்.
28 ம் தேதி காலையில் 10 மணிக்கு கோவைக்கு வரும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது, அதனை தொடர்ந்து கொடிசியாவில் பாராட்டு விழாவில் பங்கேற்ற பிறகு டவுன்ஹால் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணவிக்கின்றார் தொடர்ந்து பேரூர் தமிழ்கல்லூரி செல்கின்றார் அதன் பிறகுப்மாலை 4 மணியளவில் அவர் திருப்பூர் செல்கிறார் என தெரிவித்தார்.
டெல்டா மாவட்டத்தின் சொந்தக்காரர் என தமிழக முதலமைச்சர் தன்னை கூறி கொள்கிறார் , ஆனால் டெல்டா மாவட்டத்தின் மீது அக்கறையில்லாமல் செயல்படுகின்றார் என விமர்சித்தார் .12 லட்சம் ஹெக்டேர் நிலப்பகுதி நீரில் மூழ்கி போய் உள்ளது எனவும்,
டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகளை வைக்க முடியாத நிலை உள்ளது என தெரிவித்தார்.
22 சதவீத ஈரப்பதத்துடன் நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும்,
கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன் கேட்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
திமுகவினர் உண்மையை பேசுவதில்லை பருவ மழை காலத்திற்கு முன்னதாகவே மத்திய அரசு 950 கோடி ரூபாய் கொடுக்கின்றனர், தமிழகத்திற்கு முன்கூட்டியே இந்த பணத்தை கொடுத்து விடுகின்றனர் எனவும் தெரிவித்த அவர் மழை நீர் வடிகால் பணிகளில் 95 சதவீதம் வேலை முடிந்துவிட்டதாக சொல்கின்றனர்,
மழைக்காலத்தில் 5000 கோடி செலவு செய்து இருப்பதாக கூறுகிறார்கள், ஆனால் பணிகள் நடந்திருப்பதை போல தெரியவில்லை என்றார்.
அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம் நியாயமானது , தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதுவும் இந்த அரசு செய்யவில்லை. இந்த அரசு வெகுஜன விரோத, மக்கள் விரோத அரசாக உள்ளது. வெகு விரைவில் இந்த அரசு வீட்டுக்கு செல்லும் காலம் வரும் எனத் தெரிவித்தார்
சட்டமன்றத்தில் கேட்கும் கேள்விக்கும், சொல்லும் பதிலுக்கும் சம்மந்தமில்லாமல் உள்ளது. தொழில் துறை குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என கேட்டால் தொழில்துறை அமைச்சர் வெள்ளை பேப்பரை காட்டுகின்றார் என விமர்சித்தார்.
விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருகின்றாரா? என்ற கேள்விற்கு அதை அவரிடம்தான் கேட்க வேண்டும், கரூர் விவகாரத்தில் யாராக இருந்தாலும் அந்த இடத்தில் உண்மையான தவறை சுட்டிக்காட்ட வேண்டியது எங்களுடைய பொறுப்பு என தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்திற்கு
செல்ல தற்போதும் அச்சம்
இருப்பதாக இயக்குனர் மாறி செல்வராஜ் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு, அவர் எந்த அடிப்படையில் சொல்கிறார் என்று தெரியவில்லை, ஒவ்வொருவரின் பார்வையும் வேறு வேறாக இருக்கும், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் நான் சார்ந்த சமூகம் அதிகம் கிடையாது , அனைத்து சமூகமும் எனக்கு ஓட்டு போடுகின்றனர். ஒவ்வொருவரின் செயல்பாடுகளின் அடிப்படையில்தான் இருக்கும் எனவும் தெரிவித்தார். சாதி ரீதியிலான பிரச்சினைகளை படமாக எடுப்பது சரியல்லை என்றும் தெரிவித்தார்.
தீபாவளிக்குப்தமிழக அரசு செய்த சாதனை 890 கோடிக்கு மது விற்பனை செய்து இருப்பது மட்டும்தான் கூடிய விரைவில் இது மாறும் என தெரிவித்தார்.
PM ஸ்ரீ திட்டத்தில் கேரள அரசு சேருவது, மக்கள் நலனில் அந்த அரசு அக்கறையுடன், இருப்பதை காட்டுகின்றது என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.



