தீபாவளிக்கு கோவையில் ‘சரக்கு’ விற்பனை எவ்வளவு தெரியுமா?

கோவை: தீபாவளியையொட்டி கோவையில் ரூ. 33 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

கோவை மாவட்டத்தில் வடக்கு. தெற்கு கலால் மாவட்டத் தில் 282 டாஸ்மாக் மது பான கடைகள் செயல்ப டுகிறது.

இந்த கடைகளில் தினமும் சுமார் 5 கோடி ரூபாய் அளவிற்கு மதுபா னம் விற்பனையாகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மது பான விற்பனையை அதிகரிக்க இலக்கு வைத்து டாஸ்மாக் கடைகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இதன்படி நேற்று முன்தினம் தீபாவளி நாளில், தெற்கு கலால் மாவட்டத்தில் 128 மதுபான கடைகளில் 8.7 கோடி ரூபாய்க்கு மதுபா னம் விற்பனை செய்யப்பட்டது. அதற்கு முந்தைய தினம் 7.4 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்கப்பட்து

வடக்கு கலால் மாவட் டத்தில் 154 மதுபான கடை களின் மூலமாக தீபாவளி நாளில் சுமார் 9.3 கோடி ரூபாய்க்கு மதுவிறனை ஆனது.

மாவட்ட அளவில் சுமார் 33.7 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற் பனை செய்யப்பட்டது.

டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி, எப்எல் உரிமம் பெற்ற தனியார் மதுபான விற்பனை கடைகளிலும் மதுபான பாட்டில் விற்பனை அதிகமாக நடந்தது. மாவட்ட அளவில் 120க்கும் மேற்பட்ட தனியார் பார்கள் இருக்கிறது. இதில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மதுபாட்டில் விற்பனை நடக்கிறது. இதிலும் பல கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை நடந்துள்ளது.

Recent News

கோவையில் ரோட்டில் குப்பை வீசினால் நோட்டீஸ்- மாநகராட்சி நிர்வாகத்தின் எச்சரிக்கை…

கோவை: கோவை மாநகரில் குப்பைகளை ரோட்டில் வீசுவோருக்கு எச்சரிக்கை நோட்டீஸை மாநகராட்சி நிர்வாகம் அனுப்புகிறது. கோவை மாநகராட்சி பகுதியில் பொது இடங்களில் திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அவற்றை...

Video

தடாகம் அருகே அரிசியை ருசிபார்த்த யானை- அதிர்ச்சி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர்,...
Join WhatsApp