மக்கள் மனதை கவர்ந்த விஜய் டிவி சீரியல்களின் இந்த வார டிஆர்பி ரேட்டிங் வெளியாகியுள்ளது.
இல்லத்தரசிகளை கட்டிப் போடும் சீரியல்கள்
சீரியல் என்றாலே இல்லத்தரசிகள் என்ன வேலைகள் இருந்தாலும், டிவி முன்னாடி அமர்ந்துவிடுவார்கள். அப்படி சீரியல்கள் அவர்கள் வாழ்க்கையுடன் ஒன்றிப்போயுள்ளது.
Read news:லிப்ட் கேட்ட பாம்பு; கோவையில் பரபரப்பு; VIDEO உள்ளே…
மக்கள் மனதை வென்ற பல சீரியல்கள் உண்டு. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் என அனைத்து சேனல்களும் போட்டி போட்டுக் கொண்டு சீரியலை ஒளிபரப்பி வருகின்றனர்.

அதில் சன் டிவி சீரியலுக்கு தனி மவுசு உண்டு. அந்த சீரியல்களுக்க சற்றும் சளைக்காமல் விஜய் டிவி சீரியல்கள் போட்டி போடுவதுண்டு. அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், முதல் இடத்தை பிடித்த சீரியல் எது என்ற டிஆர்பி ரேட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
முதலிடத்தில் அய்யனார் துணை
வார வாரம் டிஆர்பி ரேட்டிங் வெளிவரும் நிலையில், இந்த வாரத்திற்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.
Read news: சுங்கத்தில் பள்ளிக் குழந்தைகள் சென்ற ஆட்டோ மீது பஸ் மோதி விபத்து! – VIDEO
இல்லத்தரசிகளின் பேராதரவை பெற்ற அய்யனார் துணை சீரியல் முதலிடத்தில் உள்ளது. மதுமிதாவின் அழகான நடிப்பும், சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் ஆகிய சகோதரர்களின் எதார்த்தமும் பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது.

6.73 டிஆர்பி ரேட்டிங்குடன் இந்த சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. அதே போல, மதுவுக்கு அடிமையான கடைக்குட்டி நாயகனை திருமணம் செய்து திமிர் பிடித்த விஜயா குடும்பத்திற்குள் குத்துவிளக்கேற்றும் பூ வியாபாரியான நாயகி, எப்படி அந்த வீட்டை மாற்றுகிறாள். மாமியார் மனதில் இடம்பிடித்தாரா, நாயகியை எதிர்கொள்ளும் போராட்டமே சிறகடிக்க ஆசை. இந்த முறை 6.70 டிஆர்பி ரேட்டிங் பெற்று 2வது இடத்தில் உள்ளது.
டிஆர்பியில் கெத்து காட்டிய விஜய் டிவி
மக்கள் மனதை வென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் அடுத்த பாகமான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 5.89 டிஆர்பி ரேட்டிங் பெற்று 3வது இடத்தையும், 4.89 டிஆர்பி ரேட்டிங் பெற்ற சின்ன மருமகள் சீரியல் 4வது இடத்தையும், அழகே அழகு சீரியல் 4.68 டிஆர்பி ரேட்டிங் பெற்று 5வது இடத்தையும் பிடித்துள்ளது.

இதை தவிர, சுட்டும் விழி சுடரே, மகாநதி, கண்மணி அன்புடன், தென்றலே மெல்ல பேசு, கனா கண்டேனடி, சிந்து பைரவி உள்ளிட்ட சீரியல்கள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன.

