லிப்ட் கேட்ட பாம்பு; கோவையில் பரபரப்பு! – VIDEO உள்ளே…

கோவை: கோவையில் பைக்கின் மீது ஏறி படம் எடுத்தாடிய நல்ல பாம்பைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement

கோவைபுதூர் ரிங் சாலையில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென சாலை குறுக்கே 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது.

Read news: சுங்கத்தில் பள்ளிக் குழந்தைகள் சென்ற ஆட்டோ மீது பஸ் மோதி விபத்து! – VIDEO

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வாகன ஓட்டி, தனது பைக்கை சாலையோரமாக நிறுத்தி விட்டு, பயத்தில் கீழே இறங்கித் தூரமாக ஓடிவிட்டார்.

Advertisement

​அப்போது அந்தப் பாம்பு அங்கு இருந்து நகர்ந்து செல்லாமல், நிறுத்தப்பட்டிருந்த அந்த இருசக்கர வாகனத்தின் மீது மெதுவாக ஏறியது.

பைக்கின் முன் பகுதிக்குச் சென்ற அந்த நல்ல பாம்பு, அங்கு அமர்ந்தபடி தலையை உயர்த்தி படம் எடுத்தாடியபடி நீண்ட நேரம் நின்றது.

Advertisement

இதைப் பார்த்த அந்த வழியாகச் சென்ற மற்ற வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களை நிறுத்தி, அதிர்ச்சியுடனும், பயத்துடனும் இந்த காட்சிகளை தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர்.

சிறிது நேரம் பைக்கை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அந்த

பாம்பு, பின்னர் தானாகவே இறங்கிப் புதருக்குள் மறைந்தது.

Read news: பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியதாக குற்றச்சாட்டு… காவலர் மீது இளைஞர் புகார்…!

​இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பாம்பு தனது பயணத்தைத் தொடர லிப்ட் கேட்டிருக்கும் போல என இணையவாசிகள் வேடிக்கையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://www.newscloudscoimbatore.com/do-you-know-how-much-the-serial-actress-singapenne-earns-per-day

Flipkart Link 2
Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

Recent News

கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ துவக்கிய ஜனநாயகன் பாஸ்போர்ட்…

ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு, "ஜனநாயகன் பாஸ்போர்ட்" என்ற மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. டாக்டர் கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார். பொறுப்புள்ள குடிமகனாக செயல்பட உறுதிமொழி எடுக்க ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...