Header Top Ad
Header Top Ad

கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்

கோவை: இஸ்கான் தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை இஸ்கான் தேர் விழா நாளை (5 ம் தேதி) நடைபெற இருப்பதால், பொதுமக்கள் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, போக்குவரத்தில், சூழலுக்கு ஏற்ப மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பேரூரிலிருந்து செட்டிவீதி, ராஜவீதி வழியாக, நகருக்குள் வாகனங்கள் வர தடை செய்யப்படுகிறது.

மாற்றாக, பேரூரிலிருந்து வரும் வாகனங்கள், செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகில், வலதுபுறம் திரும்பி, அசோக் நகர் ரவுண்டானா, பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் நால் ரோடு ரவுண்டானா வந்து சுங்கம் வழியாகவும் ஆத்துப்பாலம் வழியாகவும் செல்லலாம். வைசியாள் வீதி, செட்டிவீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள் உக்கடம், பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா, சேத்துமாவாய்க்கால் செக்போஸ்ட் சிவாலயா சந்திப்பு வழியாக இடது புறம் திரும்பி பேரூர் வழிச்சாலையில் செல்லலாம்.

மருதமலை, தடாகம் சாலையிலிருந்து தெலுங்கு வீதி வழியாக வாகனங்கள் வருவது தடைசெய்யப்படுகிறது. மருதமலை, தடாகம் சாலையிலிருந்து காந்திபார்க், பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர், ராமமூர்த்தி சாலை, சிவாலயா சந்திப்பு, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி, அசோக் நகர் ரவுண்டானா வழியாக செல்லலாம். பொள்ளாச்சி – பாலக்காடு பேரூர் வழியாக வரும் வாகனங்கள் ஒப்பணக்கார வீதியில் செல்லாமல் உக்கடம் நான்கு வழி சந்திப்பை அடைந்து சுங்கம் பைபாஸ் வழியாக சுங்கம் ரவுண்டானா வழியாக செல்லலாம்.

உக்கடத்திலிருந்து, ஒப்பணக்கார வீதி வழியாக, தடாகம் ரோடு, மருதமலை, மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும், உக்கடம் 5 முக்கு சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா, சேத்துமாவாய்க்கால் செக்போஸ்ட், சிவாலயா சந்திப்பு ராமமூர்த்தி சாலை, சொக்கம்புதூர், பொன்னயராஜபுரம், காந்திபார்க் வழியாக செல்லலாம். சுக்கிரவார்பேட்டை சாலையிலிருந்து, தியாகி குமரன் வீதி வழியாக, ராஜ வீதிக்கு, வாகனங்கள் செல்ல கூடாது.

Advertisement

கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் 5ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் வர தடை செய்யப்படுகிறது. தேர் திருவிழா நடைபெறும் ராஜவீதி, ஒப்பணக்காரவீதி, வைசியாள் வீதி, கேஜி வீதி ஆகிய சாலைகளில் அன்றைய தினம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை.

விழாவிற்கு இருசக்கர வாகனத்தில் வரும் பக்தர்கள், ராஜவீதி மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத்தலாம். பெரியகடைவீதி கோணியம்மன் கோவிலுக்கு எதிர்புறமுள்ள வாகனம் நிறுத்துமிடத்தை பயன்படுத்தலாம் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Recent News