கோவை: கோவையில் காலையில் ஊருக்குள் உலா வந்த ஒற்றை காட்டு யானை வாகனங்களை சேதப்படுத்தி முதியவர் ஒருவரை தாக்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் யானைகள் அடிக்கடி உணவு , தண்ணீர் தேடி ஊருக்குள் உலா வருவது தொடர் கதையாகி விட்டது. இடம் பெயர்வு , என பல்வேறு காரணங்களுக்காக உலா வருகின்றன.
இந்நிலையில் இன்று காலை 6.30 மணி அளவில் வெள்ளிமலைபப்ட்டினம் பகுதியில் உலா வந்த காட்டு யானை சாலை யோரத்தில் இருந்த கார் இரு சக்கர வாகனத்தை சேதம் செய்து மூர்க்கமாக சென்ற நிலையில் கோவிலுக்கு பூ பறிக்க சென்ற 90 வயது முதியவரை தாக்கியது. இதில் அவரது இரண்டு கால்களும் முறிந்த நிலையில் அக்கம், பக்கத்தினர் கூச்சலிட்டதால், வேகமாக மீண்டும் வனப் பகுதியை நோக்கி சென்று உள்ளது .
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த வனத் துறையினர் யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
காலையில் ஊருக்குள் உலா வந்த காட்டு யானையால் அப்பகுதி மக்கள் வீதி அடைந்து அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர்.