கோவை: கோவையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் ஜூலை 25ம் தேதி 8வது நாளாக கோவையில் நாளை முகாம் நடைபெறுகிறது.
அதன்படி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு மண்டலத்தில் 4 மற்றும் 10வது வார்டுகளுக்கு விளாங்குறிச்சியில் உள்ள எஸ்.எம்.எஸ் மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை நடைபெறுகிறது.
பொள்ளாச்சி நகராட்சியில் 3 மற்றும் 4வது வார்டுகளுக்கு வடுகபாளையத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் மண்டபத்தில் நடைபெறுகிறது.
வால்பாறை நகராட்சியில் 3,4,12 மற்றும் 13வது வார்டுகளுக்கு ரொட்டிக்கடை சமுதாயக் கூடத்தில் முகாம் நடைபெறுகிறது.
இருகூர் பேரூராட்சியில் 1,2,3,15,16,17,18 ஆகிய வார்டுகளுக்கு இருகூர் பேரூராட்சி திருமண மண்டபத்திலும், அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் கணுவக்கரை ஆம்போதி, முத்துக்குட்டிபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு கணுவக்கரை எஸ்.எச்.ஜி கட்டடத்திலும் நடைபெறுகிறது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
மேலும், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் கொண்டம்பட்டி, அரசம்பாளையம், சொலவாம்பாளையம் மற்றும் கோடாங்கிபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு சொலவாம்பாளையம் சின்னசாமி-சின்னம்மாள் திருமண மண்டபத்திலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது.
எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்கலாம்: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் என்னென்ன சேவைகள்? என்னென்ன ஆவணங்கள் தேவை? https://www.newscloudscoimbatore.com/ungaludan-stalin-camp-in-coimbatore-places/