Header Top Ad
Header Top Ad

கோவையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று (30.09.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

முகாம் நடைபெறும் இடங்கள் பின்வருமாறு;-

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 27, 28வது வார்டுகளுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள SNR ஆடிட்டோரியத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது.

மேட்டுப்பாளையம் நகராட்சியில் 24, 27, 31வது வார்டுகளுக்கு இஎம்எஸ் திருமண மண்டபத்திலும்,

Advertisement

கண்ணம்பாளையம் பேரூராட்சியில் 8, 9, 11, 12, 13, 14, 15வது வார்டுகளுக்கு ஜிஎஸ்என் கல்யாணமண்டபத்திலும் முகாம் நடைபெறுகிறது.

ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாரப்பகவுண்டன்புதூர் ஊராட்சி – காமாட்சி கோவில் மண்டபம்,

பொள்ளாச்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேவம்பாடி ஊராட்சி – வடக்கிபாளையம் ஸ்ரீவாரி மஹால்,

புறநகர் பகுதியாகிய பட்டணம் பகுதியில் வடக்கு ஊராட்சி பகவதி அம்மன் கல்யாண மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

மொத்தம் 6 இடங்களில் நடைபெறும் இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவித்துள்ளார்.

Recent News