விஜயின் உரையை ஏற்று மேலை நாட்டில் உள்ள தமிழர்கள் தேர்தலுக்காக காத்திருக்கின்றனர்- கோவையில் செங்கோட்டையன் பேட்டி…

கோவை: மேலை நாடுகளில் இருக்கக்கூடிய தமிழர்கள் தேர்தல் நாளை நோக்கி உள்ளார்கள் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செல்வீரர் கூட்டத்தில் பங்கேற்று விட்டு அக்கட்சியின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தலைவர்(விஜய்) செயல்வீரர் கூட்டத்தில் இன்று உரையாற்றி இருக்கிறார், அவர் உரையைப் பொறுத்தவரை தெளிவாக தமிழகம் வளம் பெறுவதற்கு, தூய்மையான ஆட்சியை தமிழகத்தில் தருவதற்கு ஊழலற்ற ஆட்சியை தருவேன் என்று முழக்கமிட்டு இருக்கிறார் என குறிபிட்டார்.

அதை ஏற்றுத்தான் இந்தியாவிலும் பல நாடுகளில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஏறத்தாழ 3 லட்சம் பேர் எப்பொழுது தேர்தல் வரப்போகிறது என்று தேர்தல் நாளை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தேர்தல் நாள் அறிவித்தவுடன் மேலை நாடுகளில் இருக்கக்கூடிய 3 லட்சம் பேர் தமிழகம் வந்து வாக்களிக்க உள்ளார்கள் என்றார் மேலும் இது உலக வரலாற்றில் நம்முடைய தலைவர் விஜய் ஒருவருக்கு தான் இந்த புகழ் உள்ளது என தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி சென்றார்.

2 COMMENTS

  1. ஆனா எனக்கு ஒரு டவுட்டு மேல போட்டு இருக்கிற மாதிரி மேலை நாடுகளில் அப்படினா வெளியூரா சொல்றீங்களா என்னன்னு தெரியல வெளியூரில் இருக்கிறதா இருந்துச்சுன்னா இந்த எஸ் ஐ ஆர் பார்ம் பீல் பண்ணும் போது நாலு நேர்ல போனோம் சைன் வேணும் அப்புறம் அதை ப்ரூப் எல்லாம் வேணும் அப்படின்னு சொல்லி கேட்டிருந்தாங்க இப்ப வந்து எஸ் சி ஆர் ஃபார்ம் பில்லப் பண்ணி கொடுக்காத உங்களுக்கு வந்து ஓட் லிஸ்ட் இருந்து ரிமூவ் பண்ணி ஓட்டு அந்த மாதிரி தான் பண்றாங்கன்னு கேள்விப்பட்டேன் இது எப்படி சாத்தியமாகும்

  2. How they know what this fellow did to tamil and tamil people….segotayan name is not suits to you…may be you are a mankotayan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp