எப்போது எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்- ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர்கள் ஏக்கம்…

கோவை: ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? என கோவை மாவட்ட நலச்சங்க கலந்தாய்வு கூட்டத்தில் கேள்வி எழுந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ஒருங்கிணைந்து, “கோவை மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம்” என்ற அமைப்பின் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தினர்.

Advertisement

இக்கூட்டத்தின் நிறைவில், சங்கத்தின் நிர்வாகி நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். செய்தியாளர்களிடம் பேசிய சங்க நிர்வாகி நாராயணசாமி, கிராமப்புற ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர்கள் சந்தித்து வரும் பல்வேறு சிரமங்கள் குறித்தும், அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய முக்கிய கோரிக்கைகள் குறித்தும் விரிவாகப் பேசினார்.

“கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர்கள் ஒன்றிணைந்து இந்தச் சங்கக் கூட்டத்தை நடத்தியுள்ளோம். கடந்த 2008-ஆம் ஆண்டிலும் இதேபோன்று சங்கம் அமைத்துச் செயல்பட்டு வந்தோம்.
ஊரகப் பகுதிகளில் குறைந்த மதிப்பளவிலான ஒப்பந்தப் பணிகளையே எடுத்து, தரம் குறையாமல் அர்ப்பணிப்புடன் செய்து வருகிறோம்.

Advertisement

ஆனால், கட்டுமானப் பொருட்களின் கடும் விலை உயர்வுக்கு ஏற்ப பொதுப்பணித்துறை வழங்கும் ஒப்பந்தப் புள்ளிகள் (Schedule of Rates) சீராக மாற்றப்படுவதில்லை. சந்தை நிலவரத்தை விட 20% குறைவான மதிப்பீட்டிலேயே பணிகள் ஒதுக்கப்படுகின்றன.


மேலும், ரூ. 10 லட்சத்திற்கு கீழ் உள்ள பணிகளுக்கும் ஆன்லைன் டெண்டர் முறை கொண்டு வரப்பட்டதால், உள்ளூர் ஒப்பந்ததாரர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு வழங்கி வந்த சிமெண்ட், கம்பி போன்ற கட்டுமானத் தளவாடப் பொருட்களை மீண்டும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணிகள் முடிவடைந்து ஆடிட் தொகையை விடுவிப்பதில் ஏற்படும் தாமதம் மற்றும் பிடித்து வைக்கப்படும் வைப்புத் தொகையை (EMD) விரைவாக வழங்க வேண்டும்.

இந்த கூட்டமும் கோரிக்கைகளும் எந்த அரசுக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ எதிரானது அல்ல; ஒப்பந்ததாரர்களின் நியாயமான வாழ்வாதாரப் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதே எங்களது நோக்கம்.

ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொண்டு, உரிய தீர்வு காண வேண்டும் என்பதே இச்சங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பெரியவர்களின் ஆசியுடன் தல தீபாவளி கொண்டாடிய புதுமண தம்பதியினர்…

கோவை: பெரியவர்களிடம் ஆசி பெற்று, பட்டாசு வெடித்து உற்சாகமாக தல தீபாவளி கொண்டாடிய புதுமணத் தம்பதியினர். கோவையில் தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ள நிலையில், புதுமணத் தம்பதியினர் தங்களது முதல் தீபாவளியான தல தீபாவளியை உறவினர்கள்...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...