Coimbatore Weather: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதனிடையே, வானிலை மையத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் (கனமழை) விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றும், நாளையும், ஜூலை 6ம் தேதியும் இரண்டு மாவட்டங்களிலும் மிதமான மழை தொடங்கி, கனமழை பெய்ய வாய்ப்புள்ளதா அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த வானிலை முன்னறிவிற்பிற்கு ஏற்ப தங்கள் பயணத் திட்டங்களை மேற்கொள்ளலாம்.