கோவை: கோவையில் நடந்து சென்றவர்களிடம் இளம் பெண்கள் இருப்பதாக விபசாரத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சரவணம்பட்டியை சேர்ந்த 39 வயது வாலிபர் ஒருவர் சரவணம்பட்டி – தூடியலூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது 2 பேர் அவரை தடுத்து நிறுத்தி தங்களிடம் அழகான இளம்பெண்கள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் தன்னிடம் பணம் இல்லை, பணம் எடுத்து வருவதாக கூறி அங்கிருந்து சென்றார். அதன் பின்னர் சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த 2 பேரையும் பிடிக்க முயற்சி செய்தனர். அதில் ஒருவர் சிக்கி கொண்டார்.
மற்றொருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி சென்றார். இதையடுத்து போலீசார் பிடிப்பட்ட நபரை போலீஸ் நிலையம் அழைத்து விசாரனை நடத்தினர். அதில் அவர் திண்டுக்கல்லை சேர்ந்த அறிவழகன் (30) என்பதும், தப்பி ஓடியது கண்ணன் என்கிற கார்த்திகேயன் (35) என்பதும், அவர்கள் 2 பேரும் விபசார புரோக்கர்களாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிவழகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.