இன்றைய ராசிபலன் | Rasipalan today

Rasipalan today: 12 ராசிகளுக்கான இன்றைய (19.06.2026) ராசிபலனை இந்த தொகுப்பில் காணலாம்.

மேஷம்
இன்று உங்களுக்குத் தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும் நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த புதிய ஆர்டர்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும்.

Advertisement

ரிஷபம்
உத்தியோகத்தில் சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். திடீர் பணவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பூர்வீக சொத்து விவகாரங்களில் நல்ல சுமுகமான தீர்வு கிடைக்கும்.

மிதுனம்
திட்டமிட்ட காரியங்களைச் செயலாற்றுவதில் இன்று சற்று தாமதம் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளைக் குறைத்துச் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உறவினர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

கடகம்
வியாபாரத்தில் இருந்த போட்டிகள் மறைந்து புதிய வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரித்து குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும்.

சிம்மம்
இன்று புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வங்கிக் கடன் எதிர்பார்ப்புகளுக்கு நல்ல பதில் வரும். நீண்ட நாள் நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். மன அமைதி உண்டாகும்.

Advertisement

கன்னி
பணியிடத்தில் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரமும் உயர் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுபவசாலிகளின் ஆலோசனைகள் உங்களுக்கு நல்வழி காட்டும்.

துலாம்
குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

விருச்சிகம்
இன்று உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் இனிய நாளாக இருக்கும். சுபச் செய்திகள் வந்து சேரும். கூட்டு வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.

தனுசு
இன்று உங்களுக்குச் சந்திராஷ்டமம் உள்ளதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. பணப் பரிவர்த்தனைகளில் கூடுதல் எச்சரிக்கை தேவை. தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து, பணியிடத்தில் அமைதியாகவும் நிதானமாகவும் செயல்படுவது உகந்தது.

மகரம்
நெருங்கிய நண்பர்களின் உதவியால் முக்கியப் பிரச்சைனைகளுக்கு இன்று சுமுகமான தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் தடைகளின்றி உடனடியாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.

கும்பம்
மனதில் புதிய உற்சாகமும் தைரியமும் பிறக்கும் நாளாக அமையும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். வாகனப் பயணங்களின் போது கவனமாக இருப்பது அவசியமாகும்.

மீனம்
வாழ்க்கைத்துணையின் ஆதரவோடு எடுக்கும் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியைத் தரும். ஆன்மீகக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்தாலும் அதைத் திறம்படச் செய்து முடிப்பீர்கள்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Today Rasipalan | இன்றைய ராசிபலன் மற்றும் சந்திராஷ்டமம்

இன்றைய 12 ராசிகளுக்குமான ராசிபலன்கள், கிரக நிலைகள் மற்றும் அதிர்ஷ்ட பலன்களை விரிவாக அறிந்து கொள்ளுங்கள்.

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...