கோவை: பிக் பாஸ் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி வரும் இன்ஸ்டா பிரபலம் வஹிதா அக்தர், மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பிக்பாஸ்
தமிழ் சின்னத்திரையில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் 10வது சீசன், 10வது வாரத்தை எட்டியுள்ளது. டிடிஎப் வாசனும், ஜேசனும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதேபோல, தான் கடந்த 8வது சீசனிலும் இளம் போட்டியாளர் சிறப்பாக விளையாடி டைட்டிலை வென்றார்.

பிரபலம்
அப்படி மக்கள் மனதை வென்று, மகுடம் சூடிய நபர் தான் முத்துக்குமரன். விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழ் பேச்சு, எங்கள் மூச்சு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், மேடைப் பேச்சாளராகவும், யூடியூபராகவும் திகழ்ந்து வருகிறார்.

இவரது தமிழ் உச்சரிப்புக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அப்படி மிகவும் பிரபலமான முத்துக்குமாரனின் இமேஜ், கடந்த இரு மாதங்களாக டேமேஜ் ஆகி வருகிறது. இன்ஸ்டா பிரபலமான வஹிதா அக்தர் என்பவர் தான் இவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களையும், ஆதாரங்களையும் சுமத்தி வருகிறார்.
தற்கொலை முயற்சி
முத்துக்குமரன் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, காதலித்து ஏமாற்றி விட்டதாக வஹிதா குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், ‘இந்த மூஞ்சி வந்து எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால், இன்று முதல் உங்களின் புதிய பாய் பிரண்டாக அப்ளை பண்ணியிருக்கேன். இதை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்,’ என்று முத்துக்குமார் கூறியுள்ளார்.
இந்த வீடியோ வெளியானது முதல் முத்துக்குமரனுக்கு எதிரான அதிர்வலைகள் சமூக வலைதளங்களில் கிளம்பி வருகின்றன. ஒருகட்டத்தில் மன அழுத்தத்தில் தற்கொலை முயற்சியையும் வஹிதா மேற்கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியதாகவும் கூறியது இந்த விவகாரத்தை இன்னும் பரபரப்பாக்கியது.
பிரண்டு கூட தான்…
இந்த விவகாரம் தொடர்பாக வஹிதாவுடன் முத்துக்குமரன் சமாதானம் பேசிய ஆடியோக்களும் வெளியாகின. அதில், ‘பிரண்டு கூட தான் ப*ப்பீங்களா?’ என்று முத்துக்குமரனை வஹிதா கேள்விகளால் துளைத்து எடுத்திருந்தார். ஒரு கட்டத்தில் நிம்மதி இழந்த முத்துக்குமார், தனது பெயரை கெடுக்க முயற்சிகள் நடப்பதாகக் கூறி, போலீஸிலும் புகார் அளித்தார்.

பிக்பாஸ் போட்டியாளரும், தொகுப்பாளருமான விஜே பார்வதி, கவிஞர் தாமரை உள்ளிட்ட பிரபலங்கள், முத்துக்குமரனுக்கு எதிராக கொதித்தெழுந்தனர்.
தீபாவளி வீடியோ
இதன் பிறகு, இருவரும் அமைதி காத்து வந்தனர். இந்த நிலையில், தீபாவளி பண்டிகையன்று முத்துக்குமரன் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், “ஊருக்கு வந்தாலே தல வாழை இலையை விரிச்சாலே நாட்டுக்கோழி குழம்பு, எலும்பு சூப், உப்புக்கறி, மூளைக்கால், முட்டை, நண்டு, மீன், இறால் என்று ஒரு மிரட்டு மிரட்டி இருக்கும். ஆனால், நமக்கு நேரம் சரியில்லாதனால், எல்லா துன்பங்களும் விலகி, மனநிம்மதியும், சந்தோஷத்தையும் கொடு முருகா, என வேண்டி, விரதத்தில் இருக்கிறோம். அதனால், இந்த தீபாவளிக்கு நமக்கு சாம்பார் தான். உங்களுக்கும் இந்த நல்ல நாளில் எல்லா கெட்டதும் விலகி, நல்லதே நடக்கும் என்று நான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்,” என்று ஒருவிதமான மனக்குமுறலுடன், சிரித்த முகத்தோடு கூறியிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், முத்துக்குமரனுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் கருத்துக்களை கூறியிருந்தனர். மேலும், சிலரோ, வஹிதா திட்டியும், ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.
எப்புறா…?
முத்துக்குமரனின் இந்த வீடியோவுக்கு காரி துப்பி வீடியோ வெளியிட்ட வஹிதா, ஆபாச சைகையும் காண்பித்து, மீண்டும் இந்த விவகாரத்தை சூடு பிடிக்க வைத்தார். மேலும், முத்துக்குமரனின் தீபாவளி வீடியோவுக்கு பதிலளித்து மற்றொரு வீடியோவையும் அவர் போட்டுள்ளார்.

அதில் அவர் பேசியதாவது; இந்த தீபாவளிக்கு ஒரு வீடியோ போட்டியல்ல.எப்படி, கண்மூடித்தனம நம்புவதா? இல்ல குருட்டு நம்பிக்கையா? ஏதோ ஒன்னு போட்டு, நான் என்னமோ உன்னை கூப்பிட்டு போய், பொய் சத்தியம் கொடுத்து, கசமுசா பண்ணி, உன்னை முடித்த மாதிரியும், எப்புறா…? இங்க பாரு, நான் எந்த அளவுக்கு முட்டாளா இருந்து இருக்கிறேனா? என் மேலே தான் தப்பு, நம்ம தான் இப்படி எல்லாருகிட்டயும் ஏமாறுகிறோம் என்று, நான் தற்கொலை முயற்சி பண்ணுனேன்.
ஆனால், நீதான தப்பு பண்ணுன. நீ யாருக்கும் பதில் சொல்ல வேணாம். எனக்கு பதில் சொல்லுடா வெண்ணெய். ஒன்னு, என்கூட உண்மையா இருந்து, அப்படியெல்லாம் நடந்து கிட்டேன் என்று உண்மையை ஒத்துக்கொள், அப்படி இல்லைனா, உன்பக்கம் ஒரு உண்மை இருக்கும்ல, ‘ஆமான்டி நீ ஒரு லூகூ கூமுட்டை, நான் உன்னை ஈஸியா ஏமாத்திட்டேன்,’ அப்படி னு ஏமாத்துனேன்னு சொல்லு. ஏதாவது ஒரு பதிலை சொல்லு.
புருஷன் தான்
என்னால முடியல. நான் எவ்வளவு கஷ்டப்படுறேன்னு உனக்கு தெரியாது. என்ன ரெண்டு ரீல்ஸ் போட்டுட்டேன்னு சந்தோஷமா இருக்கிறேனு நினைச்சுட்டயா?
ஒரு 10 வருஷம் லவ்வுல இருந்து, ஒருத்தருக்கு ஒருத்தர் மனஸ்தாபம் வந்து பிரிந்து போனால், அது வேற. நான் என்ன சொன்னேன், இதுக்கு அப்புறம் என்னை யாரு தொட்டாலும், என்னை கல்யாணம் பண்ணிக்கப் போற புருஷன் தான் என்னை தொட வேண்டும் என்று சொன்னேன். நாளைக்கு காலையில் கூட தாலி கட்டுறேன். அக்கவுன்ட்ல வையுன்னு சொன்னயேடா.
உனக்கு புரியுதா? நீ என்னை ஏமாத்துறேன்னு எப்போ எப்போ எல்லாம் உணர்ந்தேன் என்று தெரியுதா? தாலி கேட்கும் போது, பஞ்சு மிட்டாய் தரேன் என்று குழந்தையை ஏமாற்றுவது போல ஏமாத்தி இருக்கிற. பண்ணி, பக்கோடா பதில் சொல்லுடா?, இவ்வாறு கூறியுள்ளார்.






