பெரியார் அறிவுலகத்தில் TANCAM மையம் வேண்டும்- தொழில்துறையினர் கோரிக்கை…

கோவை: கோவை பெரியார் அறிவுலகத்தில் MSME தொழில்துறைக்கு தனி இடம் ஒதுக்கி TANCAM மையம் அமைக்க கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (MSME) வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தனிப் பகுதியை ஒதுக்கி, அதில் TANCAM மையம் அமைக்க வேண்டும் என்றும், பொறியியல் துறை சார்ந்த புத்தகங்களை அதிக அளவில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி MSME Nex-G கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Advertisement

MSME Nex-G ஒருங்கிணைப்பாளரும், CIA (Chinnavedampatti Industrial Association) தலைவருமான தேவக்குமார் தலைமையில் பல்வேறு தொழில் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒன்றிணைந்து மனு அளித்தனர்.

பெரியார் அறிவுலகத்தில் தங்களது கோரிக்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம் கோவையில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, தொழில்துறையினரும் பெரிதும் பயனடைவார்கள் எனத் தெரிவித்தனர்.

Advertisement

மேலும், இதன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு தொழில்துறைக்குத் தேவையான நடைமுறைப் பயிற்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்க முடியும் என்றும், புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை நிறுவனங்களுடன் இணைக்கும் வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டனர்.

அதேபோல், மேலாண்மைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த நேரடி அனுபவங்களையும் பயிற்சிகளையும் வழங்க முடியும் எனத் தெரிவித்தனர்.

Advertisement

எனவே, பெரியார் அறிவுலகக் கட்டிடத்தின் 5 மற்றும் 6-வது தளங்களைத் தங்களது கோரிக்கைக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்து, அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை விரைவில் ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இதற்கிடையே, அண்மையில் பெரியார் அறிவுலக நூலகத்தில் புத்தகங்கள் தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்த செய்திகள் வருத்தமளிப்பதாகவும் குறிப்பிட்டனர்.

தங்களது கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாவட்டப் பொறுப்பு அமைச்சர் சம்பத் குமார் ஆகியோர் கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

அன்னூரில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு…

கோவை: அன்னூர் வட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...