மும்பையில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள்- இருவர் கைது…

கோவை: மும்பையில் இருந்து கோவைக்கு கடத்திய 5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

மும்பையில் இருந்து கோவைக்கு கடத்திய ரூபாய் 5 லட்சம் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்ததுடன் இரண்டு பேரை கைது செய்தனர்.

கோவை புட்டுவிக்கி சாலை கரும்புக்கடை போலீசார் ரோந்து சென்றனர். அப்பொழுது அங்கு உள்ள கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சூலூரைச் சேர்ந்த சந்தோஷ், மதுக்கரை சேர்ந்த சந்தான்குமார் என்பதும் போதை மாத்திரைகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதை அடுத்து போலீசார் அந்த இரண்டு பேரையும் கைது செய்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்து 1,448 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூபாய் 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் அந்த இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கைதான சந்தோஷ், சந்தான் குமார் ஆகிய இரண்டு பேரும் தேங்காய் உரிக்கும் வேலைக்குச் சென்று வருகிறார்கள். இதில் சந்தான்குமாரின் பூர்வீக மத்திய பிரதேசம் ஆகும். இதனால் அவர் மும்பையில் தனக்குத் தெரிந்த நபர்கள் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி கோவையில் கடத்தி வந்து விற்பனை செய்து வந்துள்ளார்.

சந்தோஷுடன் சேர்ந்து ஒரு மாத்திரையை ரூபாய் 30 க்கு வாங்கி, ரூபாய் 350 வரையும், அதை போதை ஊசியாக ஒரு ஊசி கிருபை 1,500 வரையும் விற்பனை செய்து உள்ளார். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா ? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாக காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.