கோவை: அமித்ஷாவிற்கு எடப்பாடி என்ன ஒலிப்பெருக்கியா என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் முன்னாள் மத்திய அமைச்சர்
ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தொகுதி மறுவரைறைக்காக நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதை எதிர்க்கின்றோம் என்றார்.
திமுக நியாயமான மறுசீரமைப்பு கோஷத்தை முன்வைத்தார்கள், மக்களவை எண்ணிக்கையை அதிகரித்து பின் மறு சீரமைப்பு என சொல்வது மாயை என தெரிவத்தார். Delimitation என்பது உடனடியாக தெரிந்து விடும் , 39 தொகுதிகள் என்பது 32 ஆக குறையும் போது அது உடனடியாக அனைவருக்கும் தெரிந்து விடும் எனவும்,
ஆனால் மக்களவையில் 50 சதவீத எண்ணிக்கையை உயர்த்திவிட்டு செய்வது என்பது மாயை எனவும் தெரிவித்தார். 50 சதவீதம் உயர்த்தும் போது தமிழகத்தில்
58 தொகுதிகளாக உயரும் எனவும், Delimitationக்கு பின்பு அது 46 ஆக குறையும் ஆனால் உத்திரபிரதேசத்தில் தற்போதுள்ள 80 மக்களைவை தொகுதி 120 தொகுதியாக உயரும் எனவும், Delimitationக்கு பின்பு அது 140 ஆக அங்கு உயரும் எனவும் தெரிவத்த அவர், இந்த மறுவரையறை என்பது
தென் மாநிலங்களை மிக மிக பாதிக்கும் எனவும் தெரிவித்தார்.
மக்களவையில் தற்போதுள்ள உறுப்பினர்களில்
24.3 சதவீதம் உறுப்பினர்கள் இந்த தென்மாநிலங்களில் உள்ள 5 மாநிலங்களை சேழ்ந்தவர்கள் எனவும், இது 20.7 சதவீதமாகிவிடும் எனவும், நாடாளுமன்ற வாக்கு சதவீதம் குறைக்கப்பட்டு, தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
பெண்களுக்கு 33 ஒதுக்கீடு என்பதை ஆதரிக்கின்றோம், இதை கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சிதான் என தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
543 ல் உடனடியாக 3 ல் ஒரு பங்கு உயர்த்த வேண்டும் என 24 தேர்தலில் வலியுறுத்தினோம் என தெரிவித்தார். தொகுதி மறுவறையறை தொடர்பாக ஏப்ரல் 29 ம் தேதி இந்த கூட்டத்தை கூட்டலாமே ஏன் இவ்வளவு அவசரமாக கூட்டுகின்றனர் என தெரிவத்த அவர், நாடாளுமன்ற கூட்டத்தை 13 நாட்கள் கடந்து போடுவதால் என்ன பிரச்சினை என தெரிவத்தார்.
சட்டமன்ற தேர்தலில் கடைசி 5 நாட்கள் தேர்தல் வேலை தீவிரமாக நடக்கும், இந்த நேரத்தில் பிரச்சாரத்தை முடக்கவே நாடாளுமன்றத்தை கூட்டுகின்றனர் இது திட்டமிட்ட சதி என தெரிவித்தார்.
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்த தொகுதி வரையறையால் பாதகம் ஏற்படும், பாதகம் ஏற்படாது என்று சொல்ல வேண்டும் , ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பதில் அதிர்ச்சியை தருகின்றது என தெரிவித்த அவர்,
இது குறித்து அமித்ஷாவை கேட்டேன், அவர் பாதகம் வராது என்று சொன்னார, அதனால் பாதகம் வராது என்கின்றார் என தெரிவித்தார்.
அமித்ஷாவின் பதிலை ரிலே பண்ணுவதற்கு இவர் ஒலிபெருக்கியா? இது ஒரு கட்சி தலைவருக்கு அழகா? எனவும் தெரிவித்தார். இந்த தொகுதி மறுவறையறை என்பது
ஏமாற்று வித்தை , இது தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நான் சொன்ன கணக்கில் என்ன பிழை என்பதை எடப்பாடி பழனிச்சாமி சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். பா.ஜ.கவினர் சூழலுக்கு ஏற்ப நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும் நிதிஷ் குமார் எத்தனை நாட்களுக்கு முதல்வராக இருப்பார் என நான் ஆரம்பத்தில் கேட்டேன், நேற்று பா.ஜ.க முதல்வர் பீகாரில் பொறுப்பு ஏற்று விட்டார் எனவும் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி ஆசை நிராசை ஆகப்போகின்றது. அவர் முதல்வராக முடியாது என தெரிவித்த அவர், ஒருவேளை விபத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வந்தாலும், பிற மாநிலங்களை போல இங்கும் நடக்கும் எனவும் தெரிவித்தார்.
39 மக்களவை தொகுதியினை 58 ஆக மாற்றி பின்னர் டி லிமிட்டேசனில் 46ஆக குறைப்பார்கள், அவ்வளவு ஏமாளிகளா தமிழக மக்கள் ? எனவும் கேள்வி எழுப்பினார்.
பா.ஜ.க நேரடியாகவே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கின்றது என தெரிவித்த அவர்,
மேற்கு ஆசியா போர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வில்லை எனவும்,
பேசாத பார்லிமென்ட் என்ன பார்லிமென்ட் எனவும் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நாள் தோறும் ஒத்தி வைப்பு தீர்மானம் போர் குறித்து கொண்டு வந்தாலும் அதை பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை என தெரிவித்தார். இந்த அரசுக்கு நல்ல ஆலோசனை கொடுத்தாலாம் அதை நிராகரிப்பார்கள்
இந்தியாவின் முன்னாள் தூதர்கள் சாய்சரண், சிவ சங்கர் மேனன் போன்றவர்கள் இந்தியாவின் வெளியுறவு கொள்கை சரிந்து விட்டது என கட்டுரைகள் எழுதி இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
ராகுல்காந்தி தமிழகத்தில் இரு தினங்கள் பிரச்சாரம் மேற்கொள்வதாக தகவல்கள் இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
அரசியல் விபத்து நடந்து எடப்பாடி முதல்வரானால், பீகாரை போல் இங்கும் நடக்கும் எனவும் தெரிவித்தார். காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சாரம் செய்யவில்லையே என்ற கேள்விக்கு, திமுக தேர்தல் பரப்புரை செய்ய என்னை கேட்டார்கள் , அதனால் அவர்களது தொகுதியில் பிரச்சாரம் செய்கின்றேன் என கூறினார்.


