கோவை: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மிககனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கான வானிலை அறிவிப்பை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, வட மாவட்டங்களில் இன்று முதல் 11ம் தேதி வரை கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 12ம் தேதி கோவை, நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாட்களில் திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.