கோவையில் ரூ.17.25 கோடி மதிப்பில் 34 வளர்ச்சிப் பணிகள் – அமைச்சர் சம்பத்குமார் அடிக்கல் நாட்டினார்…

கோவை: கோவை மாநகராட்சியின் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.17.25 கோடி மதிப்பீட்டில் 34 வளர்ச்சிப் பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார் தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 36-வது வார்டுக்குட்பட்ட தில்லை நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீகிரிபிரசாத் ஆகியோர் முன்னிலையில் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதன்படி, மேற்கு மண்டலத்தில் ரூ.3.89 கோடி மதிப்பில் 8 பணிகளும், கிழக்கு மண்டலத்தில் ரூ.4.34 கோடி மதிப்பில் 12 பணிகளும், மத்திய மண்டலத்தில் ரூ.9.02 கோடி மதிப்பில் 14 பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேற்கு மண்டலத்தில் கோவில்மேடு மற்றும் கே.கே.புதூர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளில் தலா ரூ.85 லட்சம் மதிப்பில் மெய்நிகர் ஆய்வகங்கள் (AR/VR Lab) அமைக்கப்பட உள்ளன. மேலும், VNR நகர் மயானத்தில் அடிப்படை வசதிகள் மேம்பாடு, தில்லை நகரில் புதிய பூங்கா, வடவள்ளி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர், லாலி சாலை சந்திப்பு முதல் வடவள்ளி வரை எல்.இ.டி தெருவிளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மருதமலை பிரதான சாலை, கோவில்மேடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைத்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகளும் இடம்பெற்றுள்ளன.

Advertisement

கிழக்கு மண்டலத்தில் ஸ்ரீநகர் பகுதியில் சாலை அமைத்தல், ஸ்ரீ வினேஷ் நகர், டெலிகாம் நகர், தண்ணீர் பந்தல், சுப்பகோனார் வீதி, பெரியார் நகர், ஸ்ரீதனலட்சுமி நகர், காந்திநகர், வரதராஜபுரம், SIHS நகர், மங்கலப்புரம், சேரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், சி.எம்.சி. காலனியில் கால்வாய் தடுப்புச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

மத்திய மண்டலத்தில் சூரியன் தெரு சமுதாயக் கூடத்தில் கூரை மற்றும் பராமரிப்புப் பணிகள், காந்தி நகரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மையம் கட்டுதல், பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால்களை சீரமைத்தல் மற்றும் மூடுதளம் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பாலசுந்தரம் பிரதான சாலையில் மையத்தடுப்புச் சுவரை புனரமைத்து அழகுபடுத்தும் பணியும் இதில் இடம்பெற்றுள்ளது.

மேலும், ஒக்கிலியார் காலனி, பாப்பநாயக்கன்பாளையம், புளியகுளம், வி.எச். சாலை, இராமலிங்கம் காலனி மற்றும் அனுப்பார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் மெய்நிகர் ஆய்வகங்கள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர் த.குமரேசன், மண்டல உதவி ஆணையர்கள், மாமன்ற உறுப்பினர் சாந்தி, மாநகராட்சி செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...