கோவை: ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட கடல் பகுதிகளில் காற்றழுத்தம் குறைந்ததால் மீன்பிடிப் படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக கோவை உக்கடம் மீன் சந்தையில் இன்று மீன் விலை சற்று உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோவை உக்கடம் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டிற்கு கேரளாவிலிருந்தும், தமிழகத்தின் ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலிருந்தும் மீன்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
இதனிடையே ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட கடல் பகுதிகளில் காற்றழுத்தம் குறைந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லாத காரணத்தால் மீன்கள் வரத்து குறைந்துள்ளது.
இதனால் இன்று மீன் விலை சற்று உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இன்றைய விலை நிலவரப்படி, மத்தி மற்றும் அயிலை கிலோ தலா ரூ.200-க்கும், நெத்திலி ரூ.100-க்கும், பாறை ரூ.500-க்கும், சாதா பாறை மற்றும் கேர தலா ரூ.300-க்கும் விற்பனையாகின. வஞ்சரம் ரூ.1,200-க்கும், நண்டு ரூ.500-க்கும், செம்மீன் ரூ.300-க்கும், ஊழி ரூ.350-க்கும், சம்பள்ளி ரூ.160-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில், உக்கடம் மீன் சந்தையில் வழக்கமான கூட்டம் காணப்படவில்லை.
இருப்பினும், இன்று மீன் வாங்க வந்த பொதுமக்களின் எண்ணிக்கை ஓரளவு அதிகரித்திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Fresh fish displayed for sale at Ukkadam Fish Market in Coimbatore.


