கோவை: தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு, கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் சுமார் 40 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இதுதவிர, வழக்கமாகச் சேகரிக்கப்படும் குப்பைகள் 220 டன் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கோவையில் நேற்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையடுத்து, சாலையோரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய பட்டாசுக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் இன்று காலை முதல் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஐந்து மண்டலங்களிலும் லாரிகள், இலகுரக வாகனங்கள், பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் என மொத்தம் 116 வாகனங்கள் இப்பணிக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை வழக்கமான குப்பைகளையும் சேர்த்து சுமார் 220 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
நாளை பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட உள்ளதால், இன்றிரவும் தூய்மைப் பணியைத் தொடர மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.





