கோவை மாநகராட்சியில் 6,100 கிலோ துணிக்கழிவுகள் சேகரிப்பு – 53 சதவீதம் மறுபயன்பாடு, 44 சதவீதம் மறுசுழற்சி

கோவை: கோவை மாநகராட்சியில் ‘மறு நெசவு’ திட்டத்தின் மூலம் 10 வாரங்களில் சுமார் 6,100 கிலோ துணிக்கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சியில் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட பழைய துணிகளைத் தனியாகச் சேகரித்து மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்யும் வகையில் செயல்படுத்தப்பட்ட ‘மறு நெசவு’ திட்டத்தின் மூலம் 10 வாரங்களில் சுமார் 6,100 கிலோ துணிக்கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

கோயம்புத்தூர் மாநகராட்சி, GIZ இந்தியா மற்றும் GT Bharat ஆகியவை இணைந்து, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 33-வது வார்டு கவுண்டம்பாளையம் பகுதியில் ‘மறு நெசவு (Weave Again)’ என்ற முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்தின. வீடுகளில் பயன்படுத்தப்பட்ட பழைய துணிகளை மற்ற குப்பைகளுடன் சேர்க்காமல் தனியாகச் சேகரித்து, அவற்றை மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சிக்கு அனுப்புவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

சுமார் 10 வாரங்கள் நடைபெற்ற இத்திட்டத்தின் மூலம் 6,100 கிலோ துணிக்கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 53 சதவீதம் மறுபயன்பாட்டிற்கும், 44 சதவீதம் நூல் தயாரிப்புக்கான மறுசுழற்சிக்கும் அனுப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 3 சதவீதம் பிற மேலாண்மை முறைகளுக்கு அனுப்பப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதன் மூலம் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட பழைய துணிகள் குப்பைகளுடன் கலப்பது தவிர்க்கப்பட்டு, அவை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் தூய்மைப் பணியாளர்கள், களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டதுடன், பொதுமக்களிடமும் துணிக்கழிவுகளைத் தனியாகப் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இத்திட்டத்தின் செயல்பாடுகள், முடிவுகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த பயிலரங்கம் ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் கண்டா ரவி தேஜா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திட்டத்தில் பங்களித்த தூய்மைப் பணியாளர்கள், களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மேலும், இத்திட்டத்தை மாநகராட்சியின் பிற வார்டுகளுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன், மேற்கு மண்டலத் தலைவர் தெய்வானை தமிழ்மறை, மாநகர நல அலுவலர் சுபாஷ்காந்தி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...