SIR பணிகள்- கோவையில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பால் காலியாக காட்சி அளிக்கும் அலுவலகங்கள்…

கோவை: SIR பணிகளை வருவாய் துறை அலுவலர்கள் புறக்கணித்துள்ளனர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலகங்கள் காலியாக காட்சி அளிக்கின்றன.

இந்திய தேர்தல் ஆணையத்தினால் SIR எனும் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆசிரியர்கள், வருவாய் துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளர். இவர்கள் வீடு வீடாகச் சென்று அதற்கான படிவங்களை வழங்கி பூர்த்தி செய்து மீண்டும் வாங்கி பதிவேற்றம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் குறுகிய காலத்தில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள நிர்பந்திப்பதாகவும், அதனால் கூடுதல் பணி சுமை ஏற்படுவதாக வருவாய் துறை அலுவலர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் முடிவெடுக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்த பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள வருவாய் துறை அலுவலர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இன்று ஒரு நாள் படிவங்களை வழங்குதல் பூர்த்தி செய்தல் பதிவேற்றம் செய்தல் ஆகிய பணிகள் தடைபட்டுள்ளது.

வருவாய்த்துறை அலுவலர்களின் பணி புறக்கணிப்பு போராட்டத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலகங்கள் காலியாக காட்சியளிக்கின்றன. அதே சமயம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பல்வேறு அலுவலர்கள் பண பலன் வேண்டியும் இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Recent News

Video

Join WhatsApp