கோவையில் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோவையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

Advertisement

கோவையில் 10 அம்ச கோரிக்களை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ
சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் ஒரு நாள் அடையாளம் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு த ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்
உள்ளிட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

அப்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை
நடைமுறைப்படுத்த வேண்டும், ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை நீக்க வேண்டும், காலியாக உள்ள பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

அரசு ஊழியர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக எங்களது 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம் தற்போதைய முதல்வர் எதிர் கட்சியாக இருந்த போது ஜாக்டோ – ஜியோ அமைப்பிடம் ஆட்சிக்கு வந்தால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

Advertisement

ஆனால் நான்கரை ஆண்டு காலமாகியும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே தமிழக முதல்வர் உடனடியாக எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.