கோவையில் இரவில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது


கோவை: கோவையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோவை சாயிபாபா காலனி பிஎன் புதூர் பொது கழிப்பிடம் அருகே நேற்று முன்தினம் இரவில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருட்டில் பதுங்கியிருந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சல் போட்டார். இதனால் யாரேனும் வந்து விடுவார்கள் என்ற பயத்தில் அந்த வாலிபர் அந்த பெண்ணை மிரட்டிவிட்டு தப்பிச்சென்றார்.


இது குறித்து அந்த பெண் சாயிபாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது சீரநாயக்கன்பாளையம் காந்திநகரை சேர்ந்த தொழிலாளி ஜெயராஜ் (36) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Recent News

Video

Join WhatsApp