கோவைப்புதூரில் போலீஸ்காரர் மீது தாக்குதல்!

கோவை: கோவையில் நள்ளிரவில் கூச்சலிட்டதைத் தட்டிக் கேட்டதால் போலீஸ்காரரை தாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

குனியமுத்தூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கோவைப்புதூர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ரோந்து சென்று கண்காணித்து கொண்டு இருந்தார்.

அப்போது அரசு உதவி பெரும் கல்லூரி அருகே சென்ற போது 10க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டு இருந்தனர். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கூச்சலிட்டுக் கொண்டு இருந்தனர்.

இதனைப் பார்த்த போலீஸ்காரர் அங்கு சென்று அந்த வாலிபர்களை கலைந்து செல்லும் படி கூறியுள்ளார். உடனே அந்த வாலிபர்கள் போலீஸ்காரர் கிருஷ்ணமூர்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் கிருஷ்ணமூர்த்தியைத் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மற்ற போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று 10 பேர் கும்பலில் 7 பேரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து குனியமுத்தூர் போலீசார் அறிவொளி நகரை சேர்ந்த கார்த்தி (28) உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

உதயநிதி ஸ்டாலின் கைது சரியே- புகழேந்தி பேட்டி…

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தவெக முதன்மை செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, உதயநிதி ஸ்டாலின் கைது சட்டப்படி சரியான நடவடிக்கை என்றும், அவரது பேச்சு குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து கருத்து தெரிவித்தார்.

Video

கோவையில் செல்போனை களவாடிய இளம்பெண்- சிசிடிவி காட்சி…

கோவை காந்திபுரத்தில் வாடிக்கையாளர் போல் செல்போன் கடைக்கு வந்த பெண், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.