கோவையில் மூதாட்டிக்கு நடந்த கொடுமை- குற்றவாளிக்கு நீதிபதி வழங்கிய தீர்ப்பு…

கோவை: கோவையில் 85 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து நகையை பறித்துச் சென்ற குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Advertisement

கோவை சூலூர் அடுத்த பாப்பம்பட்டிபிரிவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (25). இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள், வழிப்பறி வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு சூலூர் பகுதியில் வசித்து வரும் 85 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி மூதாட்டியிடம் இருந்த 5 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றுள்ளார்.

இது குறித்து மூதாட்டி அவரது பேரனிடம் தெரிவித்ததை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Advertisement

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலிசார் சூலூர் பகுதியில் சாகுல் ஹமீதை கைது செய்து அவர் மீது பாலியல் வன்கொடுமை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கானது கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரராஜ் கைது செய்யப்பட்ட சாகுல் ஹமீதை குற்றவாளி என தெரிவித்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சாகுல் ஹமீது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை செம்மொழி பூங்காவில் அமைச்சர் சம்பத்குமார் திடீர் ஆய்வு…

கோவை: கோவை செம்மொழி பூங்காவில் ஆய்வு மேற்கொண்டு உடற்பயிற்சி மேற்கொண்டார் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள செம்மொழி பூங்கா தற்பொழுது கோவையின் முக்கியமான பொழுதுபோக்கு இடமாக...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...