கோவை: கோவையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பல்வேறு கட்சியினர் அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.
தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு பெரியார் இயக்கங்கள் பெரியாரிய அமைப்புகள் பல்வேறு கட்சியினர் சங்கங்கள் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு கட்சியினர் அமைப்பினர் சங்கத்தினர் பெரியாரின் சிலைக்கும் படங்களுக்கும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவர்களது சமூக வலைத்தள பக்கங்களில் பெரியாரியர் கொள்கைகளை மேற்கோள் காட்டி வாழ்த்துக்களையும் மரியாதையையும் தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி கோவை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் பெரியார் சிலைக்கும் புகைப்படங்களுக்கும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காந்திபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக, தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள், சமூக நீதி கட்சி என பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் கட்சியை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் நிறுவனர் அதியமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதை கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். அதுமட்டுமின்றி பல்வேறு பொதுமக்களும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மரியாதை செலுத்தினர்.





