அரையாண்டு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை- செம்மொழி பூங்காவிற்கு படையெடுத்த மக்கள்…

கோவை: தொடர் விடுமுறையை மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் அதிகப்படியான மக்கள் குவிந்தனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் முதல்வரால் திறக்கப்பட்ட செம்மொழி பூங்காவிற்கு வார விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிகின்றனர்.

செம்மொழி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட அரிய வகை மரங்கள், செடிகள், செம்மொழி வனம், மூலிகை தோட்டம், அமைதி வனம், செயற்கை நீர் வீழ்ச்சி, குழந்தைகள் விளையாடும் பகுதி திறந்தவெளி அரங்கு, கடையெழு வள்ளல்களின் கொடை சிற்பங்கள் ஆகியவை மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

தற்போது பள்ளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அரையாண்டு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று காலை முதலே தொடர்ச்சியாக மக்கள் வருகை புரிந்து செம்மொழி பூங்காவை கண்டுகளித்தனர். மாலை வேலையில் அதிகப்படியான மக்கள் வருகை புரிந்ததால் பார்க்கிங் வசதி நிரம்பியது.

குடும்பங்களுடன் செம்மொழி பூங்காவை காண வந்த மக்கள் பல்வேறு பூச்செடிகள் முன்பு நின்றும், பல்வேறு சிற்பங்கள் முன்பு என்றும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். பள்ளி விடுமுறை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் உறவினர்கள் இல்லத்திற்கு வந்த குழந்தைகள் செம்மொழி பூங்காவை பார்வையிட்டனர். ஒரே நாள் மட்டும் 30 ஆயிரத்து 156 பேர் செம்மொழி பூங்காவிற்கு வருகை புரிந்துள்ளனர்.

செம்மொழி பூங்கா மாலை 7 மணியுடன் நிறைவடையும் நிலையில் அதிகமான மக்கள் வருகை புரிவதால் கால நேரத்தை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Recent News

சூலூரில் தீ விபத்து- கரும்புகை அதிகளவு வெளியேறியதால் மக்கள் அச்சம்..

கோவை: சூலூரில் எலக்ட்ரானிகல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

Video

Join WhatsApp