ரஜினியிடம் முதிர்ச்சி தெரிகிறது: சந்திப்புக்குப் பின் வைரமுத்து கவிதை

சென்னை: தன்னை ரஜினி சந்திக்க வந்ததாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை எழுதி, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் அவர்கள்
நேற்று எனது இல்லத்திற்கு
வருகை தந்தார்

‘பாசமுள்ள மனிதனப்பா – நான்
மீசவச்ச குழந்தையப்பா’
என்ற வரிகளுக்கு
இப்போதும் அவர்தான்
இலக்கியமாக இலங்குகிறார்

Advertisement

வியப்புக்குரிய மனிதர்தான்

அடித்துக்கொண்டோடும்
அரசியல் வெள்ளம்,
சாய்த்துவிட்டோடும்
சமூகப் புயல் இரண்டையும்
அரைநூற்றாண்டாய்க் கடந்து
தன்னிடத்தை ஒருவர்
தக்கவைத்துக் கொள்வது
ஜாதகத்தால் ஆவதல்ல;
சாமர்த்தியத்தால் ஆவது

Advertisement

உணவு முறை
உடல் நிலை குறித்து
ஊடாடிய எங்கள் உரையாடல்
ஊர் சுற்றக் கிளம்பியது

எங்கள் நூறு நிமிட
உரையாடலை
‘கிரீன் டீ’ கூடக் கெடுக்கவில்லை

தமிழ்நாட்டின் நிகழ்கால
வெப்ப அரசியல் குறித்து
விவாதித்தோம்

ஒவ்வொரு தரவிலும்
அவருக்குள்ள
ஆழமும் தெளிவும் உண்மையும்
என் ஆர்வத்தைத் தூண்டின

வடநாட்டு அரசியல் குறித்தும்
அங்கு
நேரப்போவதாக நம்பப்படும்
ஒரு திருப்பம் குறித்தும்
அவர் சொன்னபொழுது
நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்

அடுத்த
இரண்டு ஆண்டுகளுக்கான
அவரது கலைப்பயணத்தின்
திட்டங்களை விவரித்தார்

2027 ரஜினி ரசிகர்களுக்குக்
கொண்டாட்ட ஆண்டாக இருக்கும்;
குறித்துக்கொள்ளுங்கள்

அவரிடம்
முதிர்ச்சி தெரிகிறது;
முதுமை தெரியவில்லை

‘இளமை இனிமேல் போகாது
முதுமை எனக்கு வாராது’

என் தமிழ்
பொய்யாகவில்லை

இவ்வாறு வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

தனுஷூக்கு அரசியல் எதிர்காலம் இருக்கு… விஜய்யால் முதல்வர் கனவில் வரிசை கட்டி நிற்கும் நடிகர்கள்…!

கோவை: எம்ஜிஆருக்குப் பிறகு யாரும் சினிமாவில் இருந்து வந்து அரசியலில் ஜெயிக்க முடியாது என்ற பேச்சுக்களை தவிடு பொடியாக்கிய முதல்வர் விஜய்யின் அரசியல் வளர்ச்சி, தமிழ் சினிமா திரையுலகில் பலருக்கும் முதல்வர் ஆசையை...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...