என்ன, அடுத்து கல்யாணம் தான்… கொளுத்திப் போட்ட பிரபல நடிகை

தமிழக முதல்வர் விஜய் மற்றும் பிரபல நடிகையான த்ரிஷாவையும் வைத்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இருவர் குறித்தும் பிரபல நடிகை சொன்ன விஷயம் தற்போது கொளுந்து விட்டெறிந்து வருகிறது.

சட்டசபை தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் தமிழகத்தில் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றது.

மே மாதம் 10ம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்தாலும், அரசுத்துறைகளில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு குரல்வளையை நடுங்க வைத்துள்ளார் விஜய். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

முதல்வர் விஜய் முழுக்க முழுக்க ஆட்சியில் கவனம் செலுத்தி வந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையை சில அரசியல் கட்சி தலைவர்களும், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவாளர்களும் விட்டு வைக்கவில்லை. முதல்வராக விஜய் பொறுப்பேற்கும் போது, அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த விவகாரம் எல்லாம் அவ்வளவு வொர்த் இல்லை என்று முதல்வர் விஜய் பேசியதும் விமர்சனத்திற்கு ஆளான நிலையில், நடிகை த்ரிஷாவுடன் அவரை தொடர்புபடுத்தி பேசி வருவது தவெகவினரிடையே அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

Advertisement

நடிகை த்ரிஷாவுடன் முதல்முறையாக கில்லி படத்தில் நடித்த விஜய், அதன்பிறகு திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ மற்றும் கோட் படங்களில் நடித்துள்ளார்.

இருவர் குறித்தும் வதந்திகள் பரவி வரும் நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து விமர்சனங்களை முன்வைத்தனர். இதில், உதயநிதி ஒருபடி மேலே சென்று, காவிரி நீர் விவகாரத்தை வைத்து இரட்டை அர்த்தத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு, பல்வேறு கட்சியினரும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், உதயநிதியை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு, அவர் ஜாமினில் வெளியே விடப்பட்டார்.

இது ஒருபுறம் இருக்க,முதல்வர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் நடிகை த்ரிஷாவும் கலந்து கொண்டு, இந்த விவகாரத்தை மேலும் மேலும் புகைய வைத்துக் கொண்டே இருக்கிறார். முதல்முறையாக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அவர், அண்மையில் நடந்து முடிந்த சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார். முதல்வர் விஜய் தேசியக் கொடியேற்ற செல்லும் போது, அவருக்கு அப்பா எஸ்ஏசி, அம்மா ஷோபாவுடன் சேர்ந்து நடிகை த்ரிஷாவும் சல்யூட் அடித்த நிகழ்வு சமூகவலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டது.

இதனை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கடுமையான விமர்சனங்களுடன் கட்டுரை வெளியானது. முதல்வரின் அலுவலகத்தின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் இதுபோன்ற நிகழ்வுகள் இருக்க வேண்டும் என்ற கோணத்தில் அந்த தலையங்கம் எழுதியிருந்தது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் விஜய் மற்றும் பிரபல நடிகையான த்ரிஷா குறித்து பிரபல நடிகை சொன்ன விஷயம் தற்போது கொளுந்து விட்டெறிந்து வருகிறது.

அவர் வேறு யாரும் இல்லை, நடிகை நிகில் கல்ராணியின் சகோதரியும், நடிகையுமான சஞ்சனா கல்ராணி தான். கன்னட மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான அவர், விஜய்யின் அரசியல் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் எழுந்து விமர்சனங்கள் குறித்து ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் பேசிய விஷயம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அவர் கூறியதாவது; நடிகர் விஜய் அரசியல் ரீதியாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அவரது அரசியல் சாதனைகளைக் குறை கூற முடியாத காரணத்தினால், தனிப்பட்ட விவகாரங்கள் மற்றும் நடிகை திரிஷாவை இலக்காக வைத்து விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. பொதுவெளியில் உள்ள பெண்களையும் அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களையும் அனைவரும் மதிக்க வேண்டும்.

அவர்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக ஒன்றாக இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. அதுமட்டுமின்றி, விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்ற பேச்சும் திரையுலகில் அடிபடுகிறது.

காதலி மனைவியாக மாறிவிட்டால் வதந்தி பரப்புபவர்கள் அமைதியாகிவிடுவார்கள். என் உள்ளுணர்வு சொல்வதைப் பார்த்தால் அந்த நிகழ்வும் விரைவில் நடக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அது நடக்க வேண்டும் என்று நான் உண்மையிலேயே விரும்புகிறேன்.

உங்களுக்குத் துணிச்சல் இருந்தால், தளபதி விஜய்யின் நிர்வாகத் திறன் குறித்துத் அரசியல் ரீதியாக மட்டுமே பேசுங்கள், இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே, முதல்வர் விஜய் – நடிகை த்ரிஷா விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், நடிகை சஞ்சனா கல்ராணியின் இந்தக் கருத்து, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலாகி விட்டது.

Tamil Nadu CM Vijay and actress Trisha in the latest political and entertainment news spotlight.

Flipkart Link 2
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் மோதல்; சவுகார் ஜானகியின் மறுபக்கம்

சவுகார் ஜானகியின் பிறப்பு, திரைத்துறையில் அறிமுகம், முன்னணி நடிகையாக உயர்ந்த பயணம் மற்றும் பல தசாப்தங்கள் நீடித்த சினிமா வாழ்க்கை குறித்து இந்தத் தொகுப்பு விரிவாகப் பார்க்கிறது.

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...