வாளையார் சோதனை சாவடியில் பிடிபட்ட தங்க கட்டிகள்

கோவை: வாளையார் சோதனைச் சாவடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 6‌ கிலோ 140 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருமானவரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

கோவை மாவட்டம், வாளையார் சோதனைச் சாவடியில் இன்று காவல் துறையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாலக்காட்டிலிருந்து கோவை நோக்கி வந்த பேருந்தினை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது, நிபின் (29) என்பவர் பேகில், வைத்திருந்த 6 கிலோ 140 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை கண்டுள்ளனர். ஆனால் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்கொண்டு நடத்தபட்ட விசாரணையில், நிபின் என்பவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருவதாகவும், கடை உரிமையாளர் ரஹ்மான் (42) என்பவர், தங்கக் கட்டிகளை கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் ஒப்படைக்க கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

உரிய ஆவணங்கள் இன்றி கைப்பற்றப்பட்ட தங்கக் கட்டிகள் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

இவங்களுக்கு வயசாகிடுச்சுனு சொன்னா நம்புவாங்களா?- 85 வயதிலும் குண்டு எரிந்து லாங் ஜம்ப் செய்த தாத்தா பாட்டிகள்…

கோவை: கோவையில் நடைபெறும் மூத்தோர் தடகளப் போட்டியில் முதியோர் அசத்தினர். கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோவை மாவட்ட மூத்தோர் தடகள போட்டிகள் இன்று நடைபெற்று வருகிறது. நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வேகமான...

Video

கோவையில் ஈச்சர் லாரியில் நெழிந்த பாம்பு…

கோவை: எல் அண்ட் டி பைபாஸில் திரில் ஈச்சர் லாரி இன்ஜினில் பதுங்கிய 8 அடி சாரைப் பாம்பு மீட்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில்...