காதல் ஜோடி சில்மிஷம்; வாலாங்குளம் கழிப்பறைக்கு பூட்டு!

கோவை: வாலாங்குளம் பூங்கா கழிப்பறைக்குள் இளம் காதல் ஜோடி சில்மிஷத்தில் ஈடுபட்டதால் கழிப்பறைக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.

Advertisement

கோவை வாலாங்குளம் கரையோரத்தில் கடந்த 29ம் தேதி இரவு ஒரு பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவரும், 18 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவியுமான காதல் ஜோடி அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

அவர்கள் சிறிது நேரம் கழித்து அங்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டு இருந்த ஆண்கள் கழிப்பறைக்குள் சென்றனர்.

கதவை பூட்டி கொண்ட அந்த காதல் ஜோடி வெகு நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலாளி கழிப்பறையின் ஆண்கள் பகுதிக்கு சென்றார். அப்போது கழிப்பறைக்குள் உள்ளே இருவரும் பேசும் சத்தம் கேட்டுள்ளது.

Advertisement

உடனே காவலாளி கதவை திறந்து பார்த்தார். அப்போது ஓரமாக கல்லூரி மாணவி பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காவலாளி அவர்கள் இருவரையும் வெளியே அழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் காதல் ஜோடி சில்மிஷத்தில் ஈடுபட்ட அந்த கழிப்பறையை பூட்டு போட்டு பூட்டினர்.

Advertisement

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் போது இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கழிப்பறைக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.

ஆட்கள் அதிகளவில் இருக்கும் போதும், கழிப்பறையை பயன்படுத்துவோருக்கும் அங்குள்ள காவலாளிகள் மூலம் திறந்து விடப்படும், என்றனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

அரசு கலைக்கல்லூரியில் PG Admission; சிறப்பு பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு

கோவை அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை படிப்புகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினரின் கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது; 557 இடங்களுக்கு 5,046 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.